Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கஜேந்திரன் வீட்டில் படையினர் விசாரணை

பதிந்தவர்: தம்பியன் 25 January 2013

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கட்சியின் செயலாளர் கஜேந்திரனின் வீட்டில் படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்றய தினம் செயலாளரின் வீட்டிற்கு சீருடைகளுடன் சென்றிருந்த படையினர், கஜேந்திரன் எங்கே எனக்கேட்டுள்ளதுடன், அவருடைய செயற்பாடுகள் குறித்தும் வீட்டிலிருந்தவர்களிடம் விசாரித்திருக்கின்றனர்.

எனினும் கஜேந்திரன் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு ஒன்றுக்காக பயணமாகியுள்ளார். இதனால் இந்த விசாரணையின் போது கஜேந்திரன் வீட்டில் இல்லாத நிலையில் படையினர் விசாரணைகளை முடித்த திரும்பியுள்ளனர்.

எனினும் இந்த விசாரணைகள் எதற்காக நடத்தப்படுகின்றது. என்ன நோக்கத்தில் நடத்தப்படுகின்றது, படையினர் எதற்காக விசாரணை நடத்தவேண்டும் என்பன போன்ற விடயங்கள் மர்மமாகவேயுள்ளன.

0 Responses to கஜேந்திரன் வீட்டில் படையினர் விசாரணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com