பொங்குதமிழ் நடைபெற்ற அதேமைதானத்தில் நிகழ்வு நடைபெற்றது. மாவீரருக்கான அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் பலஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர்.
தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்தை வென்றெடுக்க களமாடிய தளபதிகள், போராளிகளின் ஞாபகார்த்த கிண்ணங்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம், கபடி, தலையணை சண்டை, கிறீஸ்கம்பம் ஏறுதல் என்பனவும் சிறுவர்க்கான மெய்வல்லுநர் போட்டிகளும் நடைபெற்றன.
இம்முறை புதிதாக தியாகி முத்துக்குமார் ஞாபகார்த்து கிண்ணமும் இடம்பெற்று இருந்தது. இனியும் வரப்போகும் காலத்தில் எங்கள் ஏதிரி எமது மாவீரர்களின் நினைவுச் சின்னங்களை தகர்க்கும் ஒவ்வொரு கணத்திலும் மாவீரரின் நினைவான இத்தகைய நிகழ்வுகள் புலத்தில் உயிர்ப்பாக வேண்டும்.



0 Responses to வல்வை நலன்புரிச்சங்கம் இங்கிலாந்தின் மாவீரர்ஞாபகார்த்த ‘கோடைவிழா 2010’