Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஐக் கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது அரச படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். யுத்தத்தின்போது பொதுமக்கள் இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வாறெனினும் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க சகல தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் நீண்டகால நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to சிறிலங்கா போரில் பெருமளவு மக்கள் பலி: ஐ.நா. பாதுகாப்பு அவையில் நவநீதம்பிள்ளை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com