Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனேடிய நாட்டுப் பணியாளர் ஒருவரையும், பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர் ஒருவரையும் சிறீலங்கா அரசாங்கம் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது.

வன்முறையற்ற அமைதிப்படை நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய கனேடியரான ரி. ஈஸ்தோம் என்பவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றிய பாகிஸ்தானியரான அலி அஹ்மட் என்பவருமே இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் கூறுகிறது.

இவர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு படைத்துறைப் புலனாய்வுத் துறையானது குடிவரவு. குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரின் வீசாவை இரத்துச் செய்த பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மேற்படி நிறுவனமானது ஆயுதந்தாங்காத, தொழில்ரீதியான பொதுமக்கள் அமைதிகாக்கும் படையாகும். உலகம் முழுதுமுள்ள சண்டை நடக்கின்ற பிரதேசங்களில் பணியாற்றுவதற்காக இந்நிறுவனம் அந்தந்த இடங்களுக்கு அழைக்கப்படுகிறது. இதன் சர்வதேச தலைமைச் செயலகம் புரூசல்ஸில் உள்ளது.

0 Responses to கனடா பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்கள் சிறீலங்கா அரசினால் பலவந்தமாக வெளியேற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com