Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிபுணர் குழுவை அமைக்கும் ஐக்கிய நாடுகள் செயலரின் தீர்மானம் தான்தோன்றித்தனமான செயலாகும் என்பதுடன் இலங்கை விடயத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றுமுன்னாள் இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கு கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், .நா.வின் தீர்மானத்தை உண்மையாக நான் கண்டிக்கின்றேன்.

அவர் .நா.வின் அங்கத்துவ நாடுகள் அனைத்தையும் இதனூடாக கொச்சைப்படுத்தியுள்ளார். அவ்வாறானதொரு குழு இலங்கைக்குத் தேவையில்லை. மனித உரிமைகள், சிவில், சமூக, பொருளாதாரம் குறித்து நாம் வெளிநாடுகளிடமிருந்து கற்க வேண்டிய தேவையில்லை.

எனவே வெளிநாட்டு சக்திகள் எமது நாட்டில் தலையிடுவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரே .நா. செயலாளர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். மனித உரிமைகள், சமூக, பொருளாதார, சிவில், ஜனநாயகம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தவறான செயற்பாட்டினால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே வெளிநாடுகள் எமது விடயத்தில் தலையிடும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்கக் கூடாது. வீரவன்சவின் செயற்பாடு முட்டாள்தனமானது, இது சர்வதேச ரீதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. வீரவன்ச குழுவின் முட்டாள்தனமான நடவடிக்கையை நான் கண்டிக்கின்றேன். அது முட்டாள் தனமான செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to "பான் கீ முனின் செயல் தான்தோன்றித்தனமாது": தன் பங்கிற்கு ஐ.தே.க!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com