Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னால் யாரையும் கலந்துரையாடமுடியும். எம்மை யாரும் அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தி தீ மூட்டுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றும் ஐக்கிய நாடுகள் சபை அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பான் கீ மூனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை அவரது காரியாலயத்திற்கு முன்பாக நடத்த வேண்டுமே தவிர இங்கு நடத்துவதால் பயனில்லை.

ரோம் சாசனத்தில் நாம் கைச்சாத்திடாமையினால் சலக படையினரையும் காப்பாற்றியுள்ளோம். பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் செய்த போது அவரை யாரும் சந்திக்க இடமளிக்கவில்லை. நான் அவரை விமான நிலையத்தில் வைத்தே சந்தித்தேன். என்றும் அவர் சொன்னார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் எமது அரசியல் நடவடிக்கைகளை இந்த நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியிலேயே மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) வெளிநாட்டுது் தூதுவர்களை நாடாளுமன்றத்தின் எமது அலுவலகத்தில் சந்தித்தோம்.

இதன் போது அமெரிக்கா, ஆசியக் கண்டம் உள்ளிட்ட 12 நாடுகளின் தூதுவர்கள், பிரதிநிதிகளுடன் நாம் கலந்துரையாடினோம். எமது அழைப்பின் பெயரிலேயே அவர்கள் இங்கு வருகை தந்திருந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஒருவர் நாம் தகாத வகையிலான பேச்சுக்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். நாம் யாருடன் தனித்தோ ரகசியமாகவோ பேசவில்லை. அவ்வாறு பேசுவதற்கும் எம்மிடம் ஒன்றும் இல்லை. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தினார்.

இதன் விடயங்கள் எமக்கு தெளிவுபடுத்தப்பட்டதன் அடிப்படையில் நாமும் அத் திடடத்துக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்பதை அறிவித்திருந்தோம். இந் நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைக்கு உங்களுக்கு ஒத்துழைப்புத் தேவையில்லாவிட்டால் இங்கு கூறிவிடுங்கள். அது பற்றி பிரச்சினை இல்லை.

குறித்த அமைச்சர் எம் மீது தேவையற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு நாம் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நான் பிரதமரிடம் கேட்பதெல்லாம் ஒன்று தான் சர்வதேச நாணய நிதியத்துக்கு (.எம்.எப்) சர்வதேச நாணய நிதியத்துக்கு பலத்த பாதுகாப்பைக் கொடுத்து இங்கு யார் நுழைந்தாலும் தாக்குமாறு கூறியிருக்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு ஏன் உங்களால் பாதுகாப்பினை வழங்க முடியாது போயுள்ளது? இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு தீ வைக்கப் போகின்றீர்களா என்று வெளிநாடுகளில் இருந்து எமக்கு தொலை பேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு எவ்வாறு பதலளிப்பது? இந்த நிலைமை எமக்கு விசாவினைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய நாடுகளின் நிலைப்பாடுகளுடனும் எமது நாட்டுநிழைலப்பாடுகளுடனும் வேறுபாடுகள் காணப்படலாம்.

அதேபோல் .நா. தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க்கட்சியுமான எமக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கின்றது. .நாவுடன் தொடர்புடைய உலக உணவுத்திட்டம், மற்றும் .நா சிறுவர் பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றின் உதவிகளை நாம் இழந்துவிட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் ரணில் விக்கிரம சிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

1 Response to அச்சுறுத்தி தீ மூட்ட ஐ.தே.க ஒன்றும் ஐ.நா அல்ல - ரணில் விளக்கம்!

  1. He said Foces killed innecent people in Vanni. But UN caanot control Sri Lanka above matter. Because we didn't signed "Rome Agreement"?

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com