நோர்வே குடியுரிமை பெற்ற நோர்வே தமிழர்கள் யாராயினும் வன்னி சமரில் உடல் மற்றும் உளரீதியாக பாதிப்புற்றிருந்தால் நோர்வே ஈழத்தமிழர் அவையுடன் உடனடியாக தொடர்பினை ஏற்படுத்தவும்.ஸ்ரீ லங்காவில் சட்டம், ஒழுங்கு இற்றைவரையில் சீர்குலைந்தே உள்ளது. ஒரு தேசத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அதி உச்ச அதிகாரத்துவ மையமான நீதித்துறை அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக தனது பணியை நீதியாக ஸ்ரீ லங்காவில் செயற்படுத்துவதில்லை என்பது வரலாறு.
ஆகவே பாதிக்கப்பட்ட புலம் பெயர் தமிழ் மக்கள், தாம் வாழும் நாடுகளில் நீதி கோரும் நிலைமக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே உலகில் இன ஒடுக்குமுறைக்குள்ளான பல தேசத்து மக்கள் தாம் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து நீதி கோரியுள்ளனர்.
அந்த வகையில் நோர்வே ஈழத்தமிழர் அவை தனது செயற்பாடுகளின் ஒன்றான நீதி கோரும் நடவடிக்கைக்கு நோர்வே வாழ் தமிழ் மக்கள் ஒத்துழைப்ப வழங்குவீர்கள் என நம்புகின்றோம்.
நோர்வே ஈழத்தமிழர் அவைதொடர்புகளுக்கு: 67417365



0 Responses to நோர்வே ஈழத்தமிழர் அவையின் அவசர வேண்டுகோள்