Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முழுமையாக அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது என்பது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்த காவற்துறை அதிகாரியொருவரை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அச்சுறுத்தியதை ஊடகவியலாளர் ஒருவர் ஒலி பதிவு செய்ததன் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவற்துறையினர் சென்றமை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கடுமையாக காவல்துறையினரை சாடியுள்ளார். இதனையடுத்து தம்மை காவற்துறை மா அதிபரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பியதாக அந்த அதிகாரி தெரிவித்த போது, காவற்துறை மா அதிபரை தான் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்போவதாக கோத்தபாய கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் விமல் வீரவன்ஸ தனது கையடக்க தொலைபேசியில் பாதுகாப்புச் செயலாளரை தொடர்பு கொண்ட போது, குறித்த காவல்துறை அதிகாரி மற்றுமொரு அழைப்பில் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது விமல் வீரவங்ச, (குரல்) ‘பாதுகாப்பு செயலாளர் பேசுவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ காவல்துறை அதிகாரியிடம் கூறுகிறார்.” இதன் பின்னர் விமல் வீரவன்ஸ தனது கையடக்க தொலைபேசியை காவற்துறை அதிகாரியிடம் வழங்குகிறார்.

அப்போது அந்த காவற்துறை அதிகாரி: சார்.

பாதுகாப்புச் செயலாளர்: அந்த பக்கத்திற்கு காவற்துறையை அனுப்ப வேண்டாம் என .ஜீயிடம் கூறினேன்.

காவற்துறை அதிகாரி: .ஜீ. கூறியதால்தான் வந்தோம்.

பாதுகாப்புச் செயலாளர்: உடனடியாக அந்த இடத்தில் இருந்து காவற்துறையினரை அப்புறப்படுத்துங்கள். அனைத்து காவற்துறையினரையும் அப்புறப்படுத்துங்கள்.

காவற்துறை அதிகாரி: சரி சார் சரி.

பாதுகாப்புச் செயலாளர்: தேவையில்லாத வேலைதானே, ஏன் அவர்களை தாக்கினீர்கள்.

காவற்துறை அதிகாரி: சரி சார் சரி|

பாதுகாப்புச் செயலாளர்: ஏன் அவர்களை தாக்கனீர்கள். நான் இன்றே .ஜீ பதவி நீக்கம் செய்கிறேன்

காவற்துறை அதிகாரி: நல்லது சார்

பாதுகாப்புச் செயலாளர்: அங்கிருந்து காவற்துறையினர் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள்

காவற்துறை அதிகாரி: நல்லது சார்

பாதுகாப்புச் செயலாளர்: ஒரு காவற்துறை அதிகாரியைக் கூட அந்த பகுதியில் நிறுத்த வேண்டாம்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அந்த காவற்துறை அதிகாரியை தாக்குகின்றனர்.

0 Responses to வீரவன்சாவின் நடவடிக்கைகளை கோத்தபாயாவே வழிநடத்தினார்: ஒலி வடிவம் இணைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com