Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி கப்டன் புலிமகள், கடற்புலி மேஜர் திருமலை, கடற்புலி மேஜர் நல்லமுத்து ஆகியோரினதும் பளையில் காவியமான வீரவேங்கை மயிலரசியினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான தாக்குதலின்போது, 1.கடற்கரும்புலி கப்டன் புலிமகள் (முத்துலிங்கம் யசோதா – உடையார்கட்டு, முல்லைத்தீவு) 2.கடற்புலி மேஜர் திருமலை (உருத்திரசிங்கம் ரவிநந்தன் – ஏழாலை, யாழ்ப்பாணம்) 3.மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) (கார்த்திகேசு செந்தில்குமார் – பாவற்குளம், வவுனியா) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர். இம்மாவீரர்களினதும் இதே நாள் பளைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பரவலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவைத் தழுவிய, வீரவேங்கை மயிலரசி (யோசப் சகாயதர்சினி – சூரியகட்டைக்காடு, மன்னார்) என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது.

0 Responses to கடற்கரும்பு​லி கப்டன் புலிமகள் உட்பட்ட மாவீரர்களி​ன் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com