Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப். கேணல் சந்திரன் உட்பட்ட 10 மாவீரர்களினதும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் காவியமான இரு மாவீரர்களினதும் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.1990 அன்று தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலின்போது, கிளிநொச்சி மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் 1. லெப்.கேணல் சந்திரன் (இராமலிங்கம் முத்துலிங்கம் – 4ம் வாய்க்கால், கிளிநொச்சி) 2. மேஜர் வின்சன் (ஐயப்பன்) (நவரத்தினம் வசந்தன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) 3. மேஜர் அரவிந்தன் (சிவலிங்கம் தவானந்தராசா – பொலிகண்டி, யாழ்ப்பாணம்.) 4.கப்டன் நிவாஸ் (குமாரசாமி கணேஸ் – கொம்மர்துறை, மட்டக்களப்பு.) 5. வீரவேங்கை நுட்வின் 6. வீரவேங்கை நரேன் (இரத்தினசிங்கம் தங்கரூபன் – இன்பருட்டி, யாழ்ப்பாணம்) 7. வீரவேங்கை ரமணிதரன் ( மட்டக்களப்பு.) 8. வீரவேங்கை அலிஸ் 9.வீரவேங்கை சைமன் (இலட்சுமணன் நித்தியகுமார் – உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.) 10.வீரவேங்கை கோமேஸ் ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களினதும், இதேநாள் மட்டக்களப்பு மாவட்டம் மீயான்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய, வீரவேங்கை சோழன் (ஐயங்கேணி, மட்டக்களப்பு.) யாழ். மாவட்டம் வசாவிளான் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவைத் தழுவிய, வீரவேங்கை மொசாட் (காந்தன்) (மகேந்திரராஜா ஜெயக்காந்தன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.) ஆகிய மாவீரர்களினதும் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது.

0 Responses to லெப்.கேணல் சந்திரன் உட்பட்ட 12 மாவீரர்களி​ன் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com