Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்க்கரைக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை முழுமையாக இரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கு இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் நாடு முழுவதும் சர்க்கரை விலை மிக கடுமையாக உயர்ந்து வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மானியம் இரத்து செய்யப்படுமாயின் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.26 வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் சர்க்கரை விலையில் மாற்றமேதும் இல்லாதிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இதனால் ஏழைகள் பாதிப்படைவதை தவிர்க்கும் பொருட்டு சர்க்கரை விற்பனையை பல மடங்கு அதிகமாக்குமாறு உணவு அமைச்சகத்திற்கு மத்திய அரசு உத்தரவிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சர்கரை விலை உயர்வடைந்தால் ரேஷன் சர்க்கரை விலை மாத்திரமல்ல; வெளிச்சந்தையிலே விற்கப்படுகின்ற சர்க்கரையின் விலையும் தற்போது ஒரு கிலோ 40 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுவது, 55 ரூபாயைத் தாண்டி விற்கப்படக் கூடும். டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு என்றெல்லாம் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் முடிவுகளைத் தொடர்ந்து மத்திய அரசு இப்படியொரு முடிவினை எடுக்க நினைத்திருந்தாலும், அதனைத் தவிர்க்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். அதுபோலவே, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியையும் மத்திய அரசு தவிர்க்க வேண்டும். வருவாயைத் திரட்டுகிறோம் என்ற பெயரால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் மிகவும் பாதிக்கின்ற செயலாகவே இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதேவேளை காப்பீட்டு துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதிக்கலாம் என கருதப்படுகிறது.

0 Responses to சர்க்கரைக்கான மானியத்தை இரத்து செய்யுமா மத்திய அரசு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com