Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவை மாவட்டம் வால்பாறை மலை அருகே வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 7பேர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு கோவையிருந்து பழனிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஒன்று வால்பாறை மலைப் பாதையில் ஆழியாறு அருகே 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்தால் சாலையோர வலது புற தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு 200  அடி பள்ளத்தில் பாய்ந்தது.

மலையில் இருந்து உருண்ட பஸ் சுக்கு நூறாக நொறுங்கி  கீழ் நோக்கி வந்து மரங்கள் மற்றும் பாறைகளுக்கு  இடையே சிக்கி நின்றது. உடனே அவ்வழியாக வந்தோர் விரைந்து தகவலை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் பஸ்சில் பயணித்த 54 பயணிகளில் 7பேர் பலியானதாகவும் 48பேர் படுகாயாமடைந்தனர். மேலும் மீட்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to பொள்ளாச்சி அருகே 200 அடி மலைப்பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 7பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com