Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிபிஎஸ்இ 9ம் வகுப்பு பாடபுத்தகத்தில் நாடார் சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ள பகுதி நீக்கப்படும்
என அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ 9ம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளை பொறுத்தவரை தனியார் துறைதான் பாடப்புத்தங்களை தருகின்றன. அவர்கள் தவறுதலாக தகவல்களை குறிப்பிட்டிருந்தால் அதனை நாங்கள் பொறுப்பேற்க இயலாது. எனினும் மத்திய அரசு அந்தப் பாடப்பிரிவை நீக்கும் என உறுதி அளித்தாக கூறப்படுகிறது.

முன்னதாக ஜி.கே. வாசன் இந்த விவகாரம் தொடர்பாக பல்லம் ராஜுவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடதக்கது.

0 Responses to சிபிஎஸ்இ 9ம் வகுப்பு பாடபுத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான தகவல் நீக்கப்படும்: பல்லம் ராஜூ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com