Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் ஐ.நா பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக சாள்ஸ் பெற்றி குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்ந்து, தமக்கு ஆலோசனை வழங்குமாறு மூத்த அதிகாரிகள் குழு ஒன்றை உடனடியாக நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

“ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சாள்ஸ் பெற்றி குழு, எட்டு மாதகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 
 
இந்த அறிக்கையில் ஐ.நா தலைமையகம், முகவர் அமைப்புகள், பாதுகாப்புச்சபை, மனிதஉரிமைகள் சபை என்பன தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்த அறிக்கை உலகம் முழுவதிலும் எமது பணிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 எவ்வாறாயினும், நாம் இன்னும் அதிகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டிய முழுமையான பொறுப்பு உள்ளது. 
 
அதன் உடனடியான முதல் நடவடிக்கையாக, இந்தப் பரிந்துரைகளை கவனமாக ஆராய்ந்து எனக்கு ஆலோசனை கூறுவதற்கு  ஒரு மூத்த அதிகாரிகள் குழுவை நியமிக்கவுள்ளேன். 
 
ஐ.நாவின் சட்டபூர்வத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக்கூறலும் மிகவும் முக்கியமானவை. இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு நான் பல நாட்கள் முன்னதாகவே தீர்மானித்து விட்டேன். 
 
ஐ.நா பொதுச்செயலர் பதவியை ஏற்றுக் கொண்ட காலத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஐ.நாவின் அடிப்படை நோக்கத்தை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மீண்டும் ஈழத்தமிழர்களை ஏமாற்ற முயற்சிக்கும் பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com