Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய பெண்ணொருவரின் மரணத்திற்கு, அயர்லாந்தின் சட்டவிதிமுறையொன்று காரணமாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கத்தோலிக்க மதவாத நாடென்பதால் அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் இல்லை.

இந்நிலையில் அங்கு இந்திய பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்ய  இச்சட்டவிதிமுறைகளை காரணம் காட்டி மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டதால் அப்பெண் இறக்க நேரிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிரவின் - சவிதா தம்பதியினர் அயர்லாந்தில் மருத்துவர்களாக பணியாற்றிவருகின்றனர். பல் மருத்துவரான சவீதா 17 வார கர்ப்படைந்திருந்த வேளை அவரது வயிற்றில் கரு உயிரிழந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மேற்கு அயர்லாந்தின் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று கருவை அகற்றுமாறு கோரியுளனர்.

எனினும் கரு இறக்கவில்லை என கூறியும், குழந்தையின் இதயத்துடிப்பு கேட்பதாக தெரிவித்தும் மருத்துவர்கள் கருவை அகற்ற மறுத்துவிட்டனர். மேலும் சட்டரீதியாக இதற்கு அங்கீகாரம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் கருவின் பாதிப்பால், சவிதாவின் உடல்நிலை மோசமடைந்து கடந்த மாதம் 28ம் திகதி அவரும் உயிரிழக்க நேரிட்டது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அயர்லாந்து மக்கள் கருக்கலைப்பு விதிகளை சற்று தளர்த்த கோரி நாடாளுமன்றத்திற்கு வெளியே நேற்று பேரணி நடத்தியுள்ளனர்.  மேலும் இம்மரணம் குறித்து அயர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

0 Responses to கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் நிராகரித்ததால் அயர்லாந்தில் இந்தியப் பெண் மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com