Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா இனவெறி அரசால் நயவஞ்சக செயலால் வீரச்சாவை தழுவிக்கொண்ட கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக கனடா வாழ் ஈழத்தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது .



ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது , அதை தொடர்ந்து கனேடிய தமிழர் தேசிய அவை சார்பாக திரு தேவா ,கலைபண்பாட்டுக்கழகம் சார்பாக திரு சிவமோகன் , பெண்கள் அமைப்பு சார்பாக திருமதி நந்தினி விஜையபவன்  ,இளையோர் அமைப்பு சார்பாக செல்வன் பிரியன் , மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் , அரசியல் ஆய்வாளர் திரு நேரு அனைவரும் கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவுக்கு தலைவணங்கி அஞ்சலி செலுத்திய மறுகணம் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை கருத்தில் வைத்து எத்தடை வரினும் எமது விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கும் உறுதியுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் .



தளபதி கேணல் பரிதி அவர்களின் இழப்பென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய போராட்ட வழிமுறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இவரது இழப்பால், தமிழர் தேசம் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளது. ஆனால், தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தன்னுயிரை அர்ப்பணித்த தளபதி கேணல் பரிதியின் வீரச்சாவுக்கு கண்ணீர் சிந்துவதும் கவலையடைவதும் மட்டும் போதாது.





இத்தருணத்தில், தளபதி கேணல் பரிதி எந்த உயரிய இலட்சியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, அதற்காகவே தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தாரோ, அந்த இலட்சியப் பயணம் இலக்கினை அடையும் வரை தளராமல் போராடுவதே ஒவ்வொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களதும், உணர்வாளர்களதும், மற்றும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் வராலற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையுமாகும். இதன் ஊடாகவே, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதோடு, சுதந்திர தமிழீழம் என்ற உயரிய இலக்கை அடையலாம் என்பதை வீரவணக்க நிகழ்வில் உரைகள் ஆற்றிய அனைவரும் வலியுறுத்தினர் .

நன்றி

கனேடிய தமிழர் தேசிய அவை

0 Responses to கனடாவில் நடைபெற்ற கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com