தாய்லாந்து பிரதமர் யிங்லுக் சினவத்ராவை பதவியிலிருந்து விலக கோரி,
நேற்று தலைநகர் பாங்காக்கில் சுமார் 10,000 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று
கூடி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக தாய்லாந்து காவல்துறையினர் கண்ணீர் புகை வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு என்பவற்றை நடத்தியுள்ளனர்.
தாய்லாந்தை பாதுகாப்போம் என பொருள்படும் பிடக் சியாம் என பெயர் கொண்ட புதிய குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர். இதனை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் ஒழுங்கு செய்துள்ளார். யிங்லுக் அரசு ஊழல் மிகுந்ததாகவும், மரியாதைக்குரிய முடியாட்சியை அவமதிப்பதாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். அரசை வெளியேற்றுவது வரை தொடர்ந்து தாம் போராடபோவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்க்ஷின் சினவத்ராவின் சகோதரி ஆவார். இவர் இராணுவ புரட்சிமூலம் ஆட்சியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டார். எனினும் அவரது கட்சியின் சார்பில் போட்டியிட்டு, கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றார் யிங்லுக் சினவத்ரா.
நீங்கள் 15 மில்லியன் வாக்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கிறீர்கள். நான் அதில் ஒருவன் இல்ல என்பதை காண்பிப்பதற்காகவும், நான் உங்களை தெரிவு செய்யவில்லை என காண்பிப்பதற்காகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதாக போராட்டகாரர் ஒருவர் அசோசியெட் பிரஸுக்கு தெரிவித்துள்ளார்.

0 Responses to தாய்லாந்து பிரதமரை பதவி விலக கோரி பாங்காக்கில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி