ஜப்பானில் தற்போது நிலவும் நாடாளுமன்றம் ஜப்பான் பிரதமர் யோஷிஹிக்கோ நோடா ஆல் கலைக்கப் பட்டுள்ளது.
இந்நடவடிக்கை நாடாளு மன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன்பே மேற்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுத் தேர்தலும் அறிவிக்கப்பட்ட போதும் தேர்தல் திகதி இன்னமும் வெளியிடப் படவில்லை.
இந்நிலையில் ஜப்பான் ஊடகங்கள் டிசம்பர் 16 அல்லது ஜனவரி 20 ஆம் திகதி அளவில் பொதுத் தேர்தல் நிகழ்த்தப் படலாம் எனக் கூறியுள்ளன. நோடாவின் இந்த முடிவின் மூலம் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்யும் அவரின் ஆளும் ஜனநாயகக் கட்சியின் ஆளுகை முடிவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் முன்னர் பிரதமராக ஆட்சி செய்த வலதுசாரிக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெறக்கூடும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இதேவேளை முன்னர் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் பல ஆண்டுக் காலம் ஆட்சி செய்த லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியை மக்கள் பதவியிலிருந்து நீக்கித் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதையடுத்து ஆட்சி செய்த ஜனநாயகக் கட்சியும் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வரத் தவறியது எனவும் மக்களிடையே அதிருப்தி நிலவுகின்றது.
எதிர்வரும் தேர்தலில் தற்போதைய பிரதமர் நோடா லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் ஷின்சோ அபேயௌ எதிர்த்துப் போட்டியிடுகின்றார்.

0 Responses to சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் ஆட்சி மாற்றம்: நாடாளு மன்றம் கலைப்பு