Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேணல் பரிதி அவர்களைப் படுகொலை செய்த சந்தேகத்தின் கீழ் பிரெஞ்சுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சிங்கள அரசின் கைக்கூலியெனக் கருதப்படும் முதலாவது எதிராளிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கேணல் பரிதியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமையன்று சிறீலங்கா குடியுரிமை பெற்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவர் கொலையாளி என்றும், மற்றையவர் கொலைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தனக்கு ஐம்பதுனாயிரம் யூரோக்களை வழங்கி சுகபோக வாழ்வை ஏற்பாடு செய்து தருவதாக சிறீலங்கா அரசாங்கம் உறுதியளித்ததன் பிரகாரமே கேணல் பரிதி அவர்களை படுகொலை செய்ததாக தெரிவித்திருந்ததாக Le Parisien எனப்படும் பிரெஞ்சு நாளேடு இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை பிரெஞ்சு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட கொலையாளிக்கு எதிராக கொலையில் ஈடுபட்டமை, சட்டவிரோதமாக பிரான்ஸ் தேசத்திற்குள் பிரவேசித்தமை ஆகிய குற்றங்களுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து எதிராளியை தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவை பிரெஞ்சு குற்றவியல் நீதியாளர் பிறப்பித்தார்.

இதேநேரத்தில் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட மற்றைய நபர் மீதான குற்றப்பத்திரிகையை வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு அவகாசம் வழங்குமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சந்தேக நபரையும் தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவை நீதியாளர் பிறப்பத்துள்ளார்.

இது பற்றிய முழுமையான விபரங்களை Le Figaro எனும் பிரெஞ்சு ஊடகம் வெளியிட்டுள்ளது.

இதனிடையே கேணல் பரிதியின் படுகொலையுடன் சிங்கள அரசு தொடர்புபட்டிருப்பதையும், கொலையாளிக்கு ஐம்பதுனாயிரம் யூரோக்கள் வழங்கப்பட்ட விவகாரத்தையும் சில தமிழ் இணையத்தளங்கள் மூடிமறைத்துள்ள நிலையில், அவற்றை இயக்குபவர்கள் தொடர்பான சந்தேகங்கள் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே வலுப்பெறத் தொடங்கியிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நன்றி: Le Figaro

http://www.lefigaro.fr/flash-actu/2012/11/13/97001-20121113FILWWW00644-meurtre-a-paris-2-mises-en-examen.php

0 Responses to கேணல் பரிதி படுகொலைச் சிங்கள அரசின் கைக்கூலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com