Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவையில் மூளை சாவு அடைந்த ராஜாராம் என்கிற ஒரு வாலிபரால், அவர் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 10 பேரின் உயிரை பிழைக்க வைத்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

கோவையில் நடந்த கோர விபத்து ஒன்றில் சிக்கி மூளை சாவு அடைந்தார் ராஜாராமன். மருத்துவர்கள் இவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறவே, அவரது பெற்றோர் மற்றும் உறவினர், நண்பர்கள் ஒன்று சேர்ந்து, அவரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவு செய்தனர்.

மூளைச் சாவு அடைந்த ராஜாராமன் ஏற்கனவே, பலமுறை ரத்த தானம் செய்துள்ளவர் என்பதாலும், அவருக்கும் உடல் உறுப்புக்களை தானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது என்று நண்பர்கள் கூறியதாலும், உடனடியாக ராஜாராமனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரின் கண்கள், இரண்டு கிட்னிகள், நான்கு இதய வால்வுகள், கல்லீரல் என்று அனைத்து உறுப்புக்களும் சுமார் 3 மணி நேரத்தில் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.

அதற்குள் இந்த உறுப்புக்களுக்காக காத்திருப்போர் பட்டியலை கணக்கில் கொண்டு, சென்னை குளோபல் மருத்துவமனைக்கு  கல்லீரல், இதய வால்வுகள் பெற முன்னரே மருத்துவர்கள் குழு கோவைக்கு விமானம் மூலம் சென்று அங்கு காத்திருந்து, உடனடியாக பெற்று வந்தனர்.

அங்கிருந்து வந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து துறை போலீசார் உதவியுடன் 30 கிலோ மீட்டரை 7.50 நிமிடங்களில் கடக்க செய்து, குளோபல் மருத்துவமனைக்கு வந்து கல்லீரல் மற்றும் 4 இதய வால்வுகள் மூலம் 5 பேர் பயனடைந்தார்கள்.

கண்கள், மற்றும் கிட்னி இவைகளை கோவையில் உள்ள அரவிந்தா கண் மருத்துவமனைக்கும், மற்றும் இரண்டு கிட்னிகளை வேறு இரு நபருக்கும் என்று பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.  நேற்று மலை மூளை சாவு அடைந்த ராஜகோபால், ஒரு இரவுக்குள் 10 பேரை வாழவைத்துள்ளார்.  

0 Responses to கோவையில் மூளைச் சாவு அடைந்த ஒரு வாலிபரால், 10 பேரின் உயிர் பிழைத்தது : மருத்துவர்கள் சாதனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com