Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை ஆரம்பமான கூட்டத்தொடரின் போது புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களும் தமது போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் முன் உள்ள உடைந்த கதிரையின் சுற்றாடலில் இனவழிப்புத் தொடர்பான புகைப்பட சாட்சியங்களை பொது மக்களின் பார்வைக்கும் சர்வதேசத்தினிடம் நீதிகேட்டும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தினமும் காலை 7:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை இனவழிப்புத் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
கடந்த 5ம் நாள் அதே முன்றலில் தன்னை அழித்து சர்வதேசத்திடம் நீதிகேட்டு வீரச்சாவடைந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் படம் அவ்விடத்தில் வைக்கப்பட்டு பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.











0 Responses to ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com