Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிய வருகிறது.

சென்னையில் நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இன்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மொத்தம் 832 வாக்குகள் உள்ள இந்த தேர்தலில் 21 பதவிகளுக்கு 59 பேர் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் கே ஆர், தாணு உள்ளிட்ட மூன்று பேர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணு வாக்கு பதிவு முடிவடைந்ததும், இன்று மாலை 5 மணிக்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to இன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்:மாலை 5 மணிக்கு முடிவுகள் வெளியாகும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com