பூமியில் அமைந்துள்ள மிகப் பெரிய
எரிமலை ஜப்பானுக்கு அருகே பசுபிக் கடலுக்கடியில் சமீபத்தில் விஞ்ஞானிகளால்
கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. தாமு மசிஃப் என அழைக்கப் படும் இந்த எரிமலை
ஜப்பானுக்கு கிழக்கே 1609 Km தூரத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய எரிமலையாகக் கருதப் படுவது செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஒலிம்பஸ் மோன்ஸ் ஆகும்.
இதற்கு அடுத்த இடத்தில் சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிகப் பெரிய எரிமலையாகவும் பூமியில் முதலாவது பெரிய எரிமலையாகவும் தற்போது கண்டு பிடிக்கப் பட்ட தமு மசிஃப் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.
செவ்வாயிலுள்ள ஒலிம்பஸ் மோன்ஸ் எரிமலை இதை விட 25 வீதமே பெரிதாகும். மேலும் தமு மசிஃப் எரிமலை 130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பசுபிக் கடலுக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத் தொடரில் இருந்த எரிமலைத் தொடர் வெடித்ததன் மூலம் இது உருவாகியிருக்கலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்த எரிமலை பரப்பளவில் நியூ மெக்ஸிக்கோவை ஒத்துள்ளது. மேலும் இதன் அடிப்பரப்பளவு 120 000 சதுர மைல்கள் ஆகும். இந்த எரிமலை தோன்றி 145 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் இது தனது உயிர்த் தன்மையை இழந்து விட்டது என்றும் கூறப்படுகின்றது. உலகில் உயிர்ப்புடன் அதாவது செயற்படும் நிலையில் உள்ள எரிமலைகளிலேயே மிகப் பெரியது ஹாவாய் தீவில் அமைந்திருக்கும் மௌனா லோவா ஆகும். இதன் பரப்பளவு வெறும் 5179 சதுர கி.மீ என்பதுடன் இது மசிஃபுடன் ஒப்பிடப் படுகையில் வெறும் 2 சதவீதமே என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலகின் மிகப்பெரிய எரிமலை ஜப்பானுக்கு அருகே பசுபிக் கடலின் மத்தியில் கண்டுபிடிப்பு