கர்நாடக மத்திய சிறையில் இருந்து தப்பித்த கொலைக் குற்றவாளி ஜெய்சங்கரை
கண்டதும் சுட உத்தரவிட வேண்டும் என்று, என்று கர்நாடக காவல்துறை ஆலோசித்து
வருகிறது.
கர்நாடக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜெய்சங்கர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது, மற்றும் 15 கொலை குற்றங்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில், கர்நாடக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து கடந்த வாரம் ஜெய்சங்கர் தப்பியது காவல் துறைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஜெய்சங்கர் தப்பியபோது, மின்சாரம் இல்லாமல் இருந்தது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், பின்பு விசாரணையில் ஜெய்சங்கர் தப்பியபோது, மின்வெட்டு எதுவும் இல்லை என்றும் தெரிய வந்தது.
ஜெய்சங்கர் தப்பிய நிகழ்வின் பின்னணியில் சிறைத்துறை அதிகாரிகள், மற்றும் காவலர்களின் உதவி இருந்திருக்கிறது என்கிற தகவல் உறுதியாகி உள்ளதால், வீண் சர்ச்சைகளை போக்க, ஜெய்சங்கரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க கர்நாடக காவல்துறை ஆலோசித்து வருகிறது.
ஜெய்சங்கர் தப்பித்த போது, போலீஸ் உடையில் தப்பி சென்றதாகவும் தகவல் தெரிய வருகிறது. ஜெய் சங்கருக்கு போலீஸ் உடையை கொடுத்தது யார் என்கிற விசாரணை ஒருபுறம் நடைபெற்று கொண்டு இருக்க, கர்நாடக, ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலக் காவல் அதிகாரிகள் ஜெய்சங்கரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
30 க்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவு, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 30 கொலைகள் என்பன அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் மாத்திரம் 8 பாலியல் வல்லுறவு, 11 கொலைகளுக்கான குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

0 Responses to சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஜெய் ஷங்கரை கண்டதும் சுட உத்தரவுக்கு ஆலோசனை