Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காலத்தைத் தவறவிட்டால் வல்லரசும் வல்லமை இழக்கும்..
ஜி – 20 மாநாட்டில் தனது கருத்துக்களை விற்பனை செய்ய முடியாமலும், கொள்வனவு செய்ய ஆளில்லாமலும் ஒபாமா தடுமாறிக்கொண்டிருப்பதாக டென்மார்க் தெற்குப் பல்கலைக்கழக அமெரிக்க விவகாரப் பேராசிரியர் கருத்துரைத்துள்ளார்.

கடந்த பத்து மணித்தியாலங்களில் ஐரோப்பாவின் முக்கிய ஊடகங்களில் இருந்து ஒலித்த கருத்துக்களின் திரட்சி இவ்வாறு இருக்கிறது.

போரிலும், வரலாற்றிலும், அரசியலிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது படைபலமோ ஆதரவோ அல்ல காலம்தான், ஒபாமா ஏறத்தாழ காலத்தைக் கோட்டைவிட்டுவிட்டார்.

இப்போது அவருடைய நிலை இருதலைக் கொள்ளியெறும்பு போல இருக்கிறது.

தாக்குதலை மேற்கொண்டாலும் ஆபத்து பின்வாங்கினாலும் ஆபத்து திசையற்று சுழலுகிறது இரு தலைக்கொள்ளி எறும்பு.

ஜி – 20 மாநாட்டில் அவருடைய கருத்துக்கள் ஏறத்தாழ விற்க முடியாத பண்டமாகிவிட்டது, சீனாவும் தான் ரஸ்யாவையே ஆதரிப்பதாக சற்று முன்னர் மீண்டும் அழுத்திக்கூறிவிட்டது.

ஜி – 20 மாநாட்டில் தோல்வியுடன் நாடு திரும்பும் நிலையில் உள்ள ஒபாமா தனது சொந்த நாட்டிலாவது ஆதரவைப் பெற வேண்டும்.
வரும் திங்கள் ஒபாமாவின் தீர்மானத்தின் மீது விவாதம் நடாத்த காங்கிரஸ் கூடுகிறது.

செவ்வாய் அமெரிக்க மக்களுக்கு ஒபாமா பகிரங்க உரையை தொலைக்காட்சி வழியாக நிகழ்த்த இருக்கிறார்.

அதற்குப் பின் ஒரு வராமாகும் காங்கிரஸ் விவாதத்தை முடித்து, வாக்கெடுப்பை நடாத்தி முடிக்க.

காங்கிரசின் தீர்மானம் செனட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கு விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட மேலும் ஒரு வாரமாகும்.

அதற்கு அடுத்த வாரமே ஐ.நாவின் முடிவு வெளியாகும்.



இவ்வளவு காலத்தையும் ஒபாமா இழப்பது சிரியாவுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கப்போகிறது.

காரணம் ஒவ்வொரு நிமிடமும் ஒபாமா பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்..
இன்று வெளியான அமெரிக்கக் கருத்துக் கணிப்புக்களில் தற்போது வெறும் 36 வீதமான மக்களே போரை ஆதரிக்கிறார்கள், ஈராக் போரால் அவர்கள் களைத்துவிட்டார்கள்.

மேலும் ஒபாமாவும் இதுவரை திட்டவட்டமான ஆதாரங்களை வைக்கவில்லை இந்தப் போரின் அந்தம் என்னவென்பதை அவராலும் வெளிப்படையாகக் கூற முடியவில்லை.

இதற்குள் தற்போது லித்துவேனியா தலைநகர் விலினியுஸ்சில் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் சிரியா போர் தொடர்பான விவாதத்தை மூன்றாவது நாளாக நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று வெள்ளி இரவு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் யோன் கர்ரி அங்கு சென்றடைந்து தமக்கு ஆதரவு தரவேண்டுமெனக் கோரியுள்ளார் இன்று மாலை பிரான்சுடன் முக்கிய பேச்சுக்களை நடாத்துகிறார்.

அதைத் தொடர்ந்து எகிப்து, மத்திய கிழக்கு பகுதிகளுக்கான பயணத்தை மேற்கொண்டு ஆதரவைத்திரட்ட முயல்வார்.

இந்த நிலையில் இருபெரும் சிக்கலுக்குள் ஒபாமா மாட்டியுள்ளார் என்பதே யதார்த்தம் என்று டென்மார்க் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முதலாவது உலகத்திடம் ஆதரவு பெறமுடியாத ஒபாமா தனது சொந்த நாட்டு காங்கிரசிடமும் ஆதரவு பெற முடியாமல் போனால் அவர் பெரும் சிக்கலில் மாட்டுப்படுவார்.

காங்கிரஸ் அரசியல்வாதிகள் ஒபாமாவின் போர் முஸ்தீபுகளில் தமது செல்வாக்கை முதலிட்டு வரும் தேர்தலில் தோல்வியடைய விரும்பமாட்டார்கள்.

ஒபாமாவுக்கு ஆதரவாக கை உயர்த்தும் ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும் வரும் தேர்தலில் தமது சொந்த இடங்களில் பலத்த அடி வாங்க நேரிடும்.. அவர்களுக்கு இது தேவையா..?

காங்கிரசிற்குப் பணிந்து போரை நிறுத்தினால் அவ்வளவுதான் உலக நாடுகளிடையே அமெரிக்கா உருவாக்கி வைத்துள்ள இமேஜ் பூஜ்ஜியமாகிவிடும், அதைப் பாழாக்கிய அவப்பெயர் ஒபாமாவை சென்றடையும்.

காங்கிரசில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அமெரிக்கப் பெருமையைக் காப்பாற்ற அவர் போருக்குப் போனால் போரின் விளைவுகளை அவரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டிய அவல நிலை ஏற்படும்.
அதற்கான மனோபலம் ஒபாமாவிடம் இல்லை.

இப்படி எதைச் செய்தாலும் அதனால் ஒபாமாவின் பெருமைக்கு பங்கமே ஏற்படும் என்ற நிலையே யதார்த்தமாக இருக்கிறது.

இருதலைக் கொள்ளியெறும்பு எங்கு போவதென்று தெரியாது தடுமாறுவதுபோல ஒபாமா தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

உறுதியான மனமுள்ள தலைவராக அவர் இருந்திருந்தால் அக்டோபர் 21 நச்சுவாயு வீசப்பட்ட அடுத்த நிமிடமே சில ஏவுகணைகளை வீசிவிட்டு நிறுத்தியிருந்திருந்தால் உலகம் அவருடைய துணிச்சலுக்கு பின்னால் போயிருக்கும், இப்போது ஆஸாட் ஆடியிருப்பார்.
காலத்தைக் கோட்டைவிட்டுவிட்டார் ஒபாமா..

அலைகள்

0 Responses to ஒபாமாவின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பாக உள்ளது..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com