Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

70 ஆயிரம் பொதுமக்கள் இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்டதாக செனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மெக்ரே  வெளியிட்டுள்ள தகவல் முற்று முழுதான பொய்யான தகவல் என்று போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மெக்ரே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார். முன்னர் 40 ஆயிரம் என கூறினார். தற்போது அந்த எண்ணிக்கையுடன் மேலும் 30 ஆயிரத்தை சேர்த்துள்ளார். மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 09 ஆம் திகதி தனது வாய்மொழிமூலமான அறிக்கையை முன்வைதற்கு முன்னர் இப்படியான பொய்களை அவர் உலகத்திற்கு கூறிவருகிறார் என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கெல்லம் மெக்ரே வடக்கில் நடைபெற்ற போரின் போது எடுக்கப்பட்டதாக கூறும் சில புகைப்படங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.  இலங்கை 70 ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்துள்ளதால், பிரித்தானியா இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துக்கொள்ள கூடாது என மெக்ரே வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to பொதுநலவாய மாநாட்டில் கலந்துக்கொள்ள கூடாதென பிரிட்டனிற்கு மெக்ரே வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com