அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காங்கிரஸ் சபாநாயகர் யோன் பெகானர்,
டெமக்கிரட்டி தலைவர் நான்சி பிலேசி ஆகிய இருவரையும் செவ்வாயன்று வெள்ளை
மாளிகைக்கு அழைத்து பேச்சுக்களை நடாத்தினார்.
அத்தருணம் இருவரும் தமது ஆதரவை அதிபருக்கு தெரிவித்துள்ளார்கள், உலகம் முழுவதும் இதுபோன்ற எதிரிகள் எம்மைச் சூழ்ந்துள்ளார்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் சபாநாயகர் கூறினார்.
இவரைப்போல இன்னொரு றிப்பப்ளிக்கன் கட்சி உறுப்பினரும் தனது ஆதரவை ஒபாமாவுக்கு தருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல நான்சி பிலேசி கூறும்போது காங்கிரசில் ஒபாமாவின் பிரேரணை வெற்றிபெறும் என்றதோடு, ஆஸாட் றெஜீமின் அடாவடித்தனங்களுக்கு எதிரான நடவடிக்கை அவசியம் என்றார்.
இருவருடனும் பேச்சுக்களை நடாத்திய பின்னர் வெள்ளை மாளிகை தகவல் தரும்போது ஒபாமா காங்கிரஸ்சின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும், அமெரிக்கப் படைகள் தரையில் இறங்காது, ஆஸாட்டின் பலம் வெகுவாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 21 அக்டோபர் நச்சுவாயு தாக்குதலை நடாத்திய ஆஸாட் றெஜீமே என்பதில் ஒபாமா யாதொரு குழப்பமும் அடையவில்லை.
காங்கிரஸ் ஆதரவு கிட்டினால் அமெரிக்கா தாக்குதலை நடாத்தும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் ஐ.நா செயலர் பான் கி மூன் தன்னுடைய அவசர வேண்டுதலை வெளியீடு செய்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் அனுமதி இல்லாமல் சிரியா மீது யாரும் தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
அதேவேளை நச்சுவாயு பாவித்திருந்தால் முதலாம் உலகப் போரின்போது எழுதப்பட்ட சட்டத்தின் பிரகாரம் அது போர்க்குற்றமே சம்மந்தப்பட்டவர் அதற்கான தண்டனை பெற்றேயாக வேண்டும்.
தற்போது சிரியாவின் உள்ளே 4.2 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள், நாடுவிட்டு இரண்டு மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளார்கள்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அனைத்து நாடுகளும் இணைந்து பேச வேண்டியுள்ளது.
சிரியா பிரச்சனை என்பது சிறிய விடயமல்ல அனைவரும் இணைந்து பேசித்தீர்க்க வேண்டிய விடயம் என்பது ஐ.நாவின் கருத்தாகும்.
சிரியா சென்று வந்துள்ள ஐ.நா நிபுணர்கள் சேகரித்து வந்த தடயங்கள் நாளை பரிசீலிக்கப்படவுள்ளன, பாரபட்சம் இல்லாது ஐ.நாவின் முடிவு வெளியாகும் என்றும் பான் கி மூன் தெரிவித்தார்.
அதேவேளை சிரியா மீதான தாக்குதலை தென்னாசிய நாடுகள் வலுவாக எதிர்த்துள்ளன, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் இதில் முன்னணி வகித்துள்ளன.
அதேபோல சிறீலங்காவும், நேபாளமும் அமைதியான முறையில் பேசித் தீர்க்க வேண்டும் என்று கேட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் சுமார் ஆறு மில்லியன்பேர் சிரியாவையும், அதைச்சுற்றிய நாடுகளிலும் பணியாற்றுகிறார்கள்.
இந்த வட்டகையில் போர் மேகம் மூண்டால் இவர்களுடைய வருமானம் பெரிதும் பாதிக்கப்படும், இதே நிலைதான் அனைத்து தென்னாசிய நாடுகளுக்கும் இருக்கிறது.
போர் வெடித்தால் தென்னாசிய நாடுகளில் வேலை இழப்பு, எரிபொருள் விலை உயர்வு, நாணயப் பெறுமதி வீழ்ச்சி போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்படும்.
மேலும் இந்த மூன்று நாடுகளிலும் 170 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்கிறார்கள் அவர்களுடைய உணர்வுகளையும் இந்த நாடுகள் மதிக்க வேண்டியிருக்கிறது.
வரும் 2014 இந்தியாவிலும், பங்களாதேசிலும் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது, ஆகவே கவனமாக நடக்க வேண்டிய தேவை இருக்கிறது, அமெரிக்காவை ஆதரித்தால் வாக்கு வங்கியில் பலத்த அடி விழும்.
ஈரானிடமிருந்து மட்டும் இந்தியா பத்து மில்லியன் தொன் ஓயிலை இறக்குகிறது, பிராந்தியம் போரில் எரிந்தால் இந்தியாவில் எண்ணெய் விலை நெருப்பாய் எரியும்.
சிரியாவில் தாக்குதல் ஆரம்பித்தால் நச்சுவாயுவை விட பெரிய பாதிப்பு உலகில் பல நாடுகளுக்கு ஏற்படும்.
அலைகள்

0 Responses to ஒபாமா காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு இந்தியா எதிர்ப்பு