Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் நோக்கில் விடயங்கள் கையாளப்பட்டுள்ளதாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களையும்- சிறைகளில் வாடும் அரசியற்கைதிகளையும் சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள கோரும் பகுதிகளை முன்வைத்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இது துரோகத்தின் ஒரு பக்கம் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் 9வது பந்தியில், ”மோதலின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை பற்றிய இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, உண்மையும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் நிலைநாட்டுவதோடு, இழப்பீடுகள் அடங்கலாக நிவாரணங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள வி.சகாதேவன், தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டிய சரியான தருணம் இது கோரியுள்ளார்.

 ஆகவே, தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாபஸ் பெற்று, இரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அத்தோடு தேர்தலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த வேண்டியேற்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கிறது: போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com