Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின்போது காணாமற்போனவர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. அப்படி காணாமற்போனவர்கள் என்று கருதப்பட்டால், அவர்கள் கொல்லப்பட்டவர்கள் என்றே உணரப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறுதி மோதல்களில் இராணுவத்திடம் 12000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்தவர்கள். அவர்கள் அனைவரும் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டார்கள். ஆனால், கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கை 23000க்கும் அதிகம். இறுதிமோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 50- 60 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விபரங்களை புலிகளே உறவினர்களுக்கு தெரிவித்திருக்க வாய்ப்புக்கள் இல்லை. அப்படியான நிலையில், காணாமற்போனவர்கள் என்று யாரையும் கருத முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி மோதல் காலங்களில் விசாரணைகளுக்கான பிள்ளைகளை பெற்றோர் யாராவது இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிடம் கையளித்திருந்தால், அவர்களுக்கான பதிவு விபரம் வழங்கப்பட்டிருக்கும். அதை முன்வைத்து பெற்றோர்களும் போராட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆனால், அவ்வாறான நிலை ஏதும் காணப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இறுதி மோதல்களில் காணாமற்போனவர்கள்; கொல்லப்பட்டவர்களாகவே கருதப்பட வேண்டும்: சரத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com