Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எல்லை பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளது எதிர்க் கட்சிகளிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவதும், இதனால் துப்பாக்கி சூடு நடைபெறிவதும், இதன் காரணமாக இரு நாட்டு வீரர்களும் சுட்டுக் கொல்லப்படுவது என்கிற நிலையும் தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறலால் காஷ்மீரில் தொடர்ந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இரவு நேரத்தில் நடக்கும் துப்பாக்கி சூட்டால், குழந்தைகள் மிரண்டு கிடக்கின்றன. வருடத்தில் முக்கால்வாசி நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்று காஷ்மீரில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவர்களின் எதிர்கால் வாழ்க்கை நாசமாகி கொண்டிருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தொயாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலமே தேர்வு காண முடியும். பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும். அதற்கான சூழலை இரு நாடுகளும் உருவாக்க வேண்டும்.நாளை என்ன நடக்கும் என்று அறியாத நிலையில் எந்த பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தியின் மூலம் தீர்வு காண்பது என்பது ஒன்றே நல்ல முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சு எதிர்கட்சிகளிடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

0 Responses to எல்லை பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும் : சல்மான் குர்ஷித்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com