Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாவுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தால் அவருடைய கடைசி மகள் 12 வயதுடைய சஸ்காவை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வோம் என்று ஈரானிய இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக டென்மார்க்கில் இருந்து வரும் எக்ஸ்ரா பிலதற் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானில் உள்ள மாநிலம் ஒன்றின் முன்னாள் ஆளுநரான அலிரியா போகானியே மேற்கண்ட கடுகளவும் பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் போர் ஆரம்பித்தால் இதுபோன்ற கடத்தல்கள் மிக மோசமாக இடம் பெறும் என்றும் பல அமெரிக்கப் பிரஜைகள் காணாமல் போவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடாத்தினால் பதிலுக்கு தாம் அமெரிக்க ஆர்வமுள்ள இடங்களில் எல்லாம் பாய்வோம் என்றுள்ளார்.

அதேநேரத்தில் இவருடைய அதி உயர் மதத்தலைவரான அயதொல்லா அல் காமானியும் போரில் அமெரிக்கா தோல்வியடையும் என்று நேற்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்காவும், அதற்குத் துணைபோகும் ஏனைய நாடுகளும் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடாத்தினால் அவர்கள் நினைப்பதைப்போன்ற வெற்றியைப் பெற்றுவிட முடியாது.

எப்படி ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அவர்கள் போரின் இறுதியில் தோல்வியடைந்தார்களோ அதேபோல சிரிய போரிலும் தோல்வியடைவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

இது ஈரானில் இருந்து அமெரிக்காவிற்கு விடப்படும் மூன்றாவது பெரிய எச்சரிக்கையாகும்.


சிரியா மீது அமெரிக்கா நடாத்த எத்தனிக்கும் தாக்குதல்களுக்குள்ளால் மறை பொருளாக இருப்பது ஈரான்தான், சிரியா தாக்கப்பட்டால் கண்டிப்பாக ஈரானும் அதே தாக்குதல்களை சந்திக்க நேரும் என்ற அச்சம் நிலவுவதால் ஈரானின் எச்சரிக்கை மிக மோசமாக உள்ளது.

என்ன செய்வதென்று தெரியாது நிலைதடுமாறுவோர் பேசுவது போல கடந்த சில தினங்களாக ஈரானில் இருந்து கருத்துக்கள் வருகின்றன.

ஈரானும், சிரியாவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டால் ரஸ்ய பனிக்கரடியை கடைசியில் நாய்தான் இழுத்துக் கொண்டு போகும் என்பதால், எப்படியாவது இந்தத் தடவை ரஸ்யா பல்டியடிக்காது என்று இந்த நாடுகள் நம்புகின்றன.
அதொன்றைத்தவிர அவர்களிடம் வேறு பிடிமானம் இல்லை.

அலைகள்

0 Responses to ஒபாமா மகளைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய மிரட்டல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com