புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்தவர் சுஷ்மிதா பானர்ஜி (வயது 49). இவர் கடந்த 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான ஜான்பஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே கணவருடன் வசித்து வந்தார்.
நேற்று சுஷ்மிதா பானர்ஜியின் வீட்டுக்கு வந்த தீவிரவாதிகள் சிலர், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை கட்டிப்போட்டு விட்டு சுஷ்மிதா பானர்ஜியை மட்டும் வெளியே இழுத்துக்கொண்டு சென்றனர். பின்னர் அவரை சுட்டுக்கொன்று விட்டு அவரது உடலை அருகே உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் போட்டு விட்டு சென்றனர்.
இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

0 Responses to இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக்கொலை