Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது அதிகார வரம்பை மீறி செயற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரச தகவல் திணைக்களம், நவநீதம்பிள்ளை ஒரு சிவில் அமைப்பின் பிரதிநிதி மட்டுமே எனவும் ஒருதலைப்பட்சமாக கருத்துக்களை வெளியிடும் அதிகாரம் அவருக்கு இல்லை என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது இலங்கை விஜயத்தின் முடிவில் கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

போருக்கு பின்னர் அனைவரையும் ஆச்சரியமடைய வைக்கும் நாடாக இலங்கைக்கு மாற சந்தர்ப்பம் இருந்தது. எனினும் இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் அடையாளங்கள் அதிகளவில் தென்படுவதாக நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்து அரசியல் ரீதியான கருத்து என அரசங்கம் கூறியுள்ளது.
மனித உரிமை ஆணையாளர் தனது விஜயத்தின் போது சுதந்திரமாக அனைவரையும் சந்திக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக இதனடிப்படையில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் நடைபெற்று வரும் அபிவிருத்திகளை அவர் நேரில் பார்த்து அறிந்து கொண்டதாகவும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பிலான தீர்மானங்களை நாட்டு மக்களேஎடுக்க முடியும் எனவும் வெளிநபர்கள் இது குறித்து தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to நவநீதம்பிள்ளை அதிகார வரம்பை மீறி செயற்பட்டுள்ளார்: அரசாங்கம் குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com