Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னாபிரிக்காவில் இன விடுதலைக்காக நெல்சன் மண்டேலா செய்ததைத்தான் இலங்கையில் பிரபாகரனும் செய்தார். அவரின் இலக்குத்தவறல்ல. போராட்டத்தில் மண்டேலா வெற்றி பெற்றமையால் அவரை மாமனிதராகவும் பிரபாகரன் அதில் தோல்விடைந்தமையால் சர்வதேசத்தின் முன் பயங்கரவாதியாகவும் முத்திரை குத்தியுள்ளனர்.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்குக் கூட இது ஏன் புரியவில்லை? இவ்வாறு பிரபல இடதுசாரித் தலைவரும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று கேள்வி யெயழுப்பினார்.

மண்டேலாவும் வெள்ளையர்களை குண்டு வைத்துக் கொலை செய்தவர் தான். ஆனால், இன்று மண்டேலாவை அகில உலகமே மாமனிதராகப் போற்றுகிறது'' என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட விக்கிரமபாகு மேலும் தெரிவித்ததாவது, இலங்கை வந்திருந்த நவிப்பிள்ளை, அரசிற்கு எதிராக மாத்திரம் குற்றங்களை சுமத்தி விட்டுச் சென்றுள்ளனார் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் கடுமையாக விமர்சித்து விட்டுச் சென்றுள்ளார். புலிகளின் செயற்பாட்டை முற்றாக நிராகரித்தே இவர் கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவித்துள்ளார். நவிப்பிள்ளை ஒன்றை மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டும், அவர் வாழும் நாடான தென்னா பிரிக்காவின் தலைவரான நெல்சன் மண்டேலாவும் பிரபாகரன் செய்ததையே தான் செய்தார். மண்டேலாவும் பல வெள்ளையர்களை குண்டு வைத்துக் கொலை செய்தவர் தான். ஏன், அவர் மனைவிக்கு எதிராகவும் பல குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இன்று அவர் அனைவராலும் போற்றப்படுகின்ற, சர்வதேசமே மதிக்கின்ற ஒரு மனிதராக இன்று வாழ்ந்து வருகிறார். காரணம், அவர் தம்மின மக்களுக்காக நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றார். அதனால்தான், இன்று இவ்வாறான நிலையிலுள்ளார்.

அதே செயற்பாட்டைத்தான் பிரபாகரனும் அன்று செய்தார். ஆனால், இன்று சர்வதேசத்தின் முன் ஒரு பயங்கரவாதியாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளார். பிரபாகரன் போராட்டத்தை மேற் கொண்டவிதம்  பிழையாக இருக்கலாம். ஆனால், தமது இன மக்களுக்காகப் போராடிய இவரது குறிக்கோளை ஒரு போது பிழையென்று கூறவே முடியாது.

இங்கு நடைபெற்ற யுத்தம் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவின் யோசனைகளின் படியே நடைபெற்றது. தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்திகளும் இவர்களின் ஆலோசனைகளின்படியே இடம் பெறுகின்றன. இவர்கள் ஏதோ இந்த அரசின் உறவினர்கள் போல செயற்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது'' எனவும் தெரிவித்தார்.

0 Responses to மண்டேலா வழியில் போராடியவரே பிரபாகரன்! அவர் இலக்கு தவறல்ல- விக்கிரமபாகு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com