Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்கால ஈழத்தமிழ் மக்களின் உணர்வலையில் சிரிய பொது மக்கள்..
அன்று சிறீலங்கா இராணுவம் ஆயுதங்களுடன் பொது மக்கள் வாழிடங்களுக்குள் புகுந்து தாக்குதலை நடாத்தும்போது இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களிடையே எத்தகைய பதட்டமான அலப்பாரிப்புக்களைக் கேட்க முடிந்ததோ இன்று அதே உணர்வலைகளை சிரியாவில் கேட்கிறோம்.

சிரியாவில் உள்ள மக்கள் ரிவிற்றர் பக்கங்களில் எழுதும் தகவல்களின் சேகரிப்புக்களில் சில இங்கே தரப்படுகின்றன, இவை அன்று எமது மக்களிடையே கேட்ட குரல்களுடன் ஒத்துப்போகிறது.

01. அமெரிக்கர்கள் தாக்குதல் நடாத்தி சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டை கொன்றுவிடுவார்கள் என்று பலர் கருதுகிறார்கள். கடாபி போல ஆஸாட்டின் கதையும் ஆகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது.

02. டமாஸ்கஸ் முழுவதும் திடீர் சோதனைச் சாவடிகள் அதிகரித்துவிட்டன, எங்கு பார்த்தாலும் சோதனைகளும், மடைத்தனமான கேள்விகளுமாக இருக்கிறது. இரவு நடந்துவிட்டு வரும்போது சோதனைச் சாவடியில் நின்ற இராணுவத்தினர் இடை மறித்து கேட்காத கேள்வி எல்லாம் கேட்கிறார்கள் என்கிறார் ஒரு வயோதிபர்.

03. பாணின் விலை திடீரென உயர்ந்துவிட்டது, இப்போதே உணவுப் பொருட்களை பல நாட்களுக்கு தேவையான அளவுக்கு வாங்கிச் சேகரிப்பில் வைக்க போய்க்கொண்டிருக்கிறோம் விட்டால் தங்கத்தின் விலைக்கு உணவுப்பொருட்களின் விலை போய்விடும் – பெண்கள்

04. இப்பொழுது நிலவும் அமைதி நிரந்தரமானதல்ல புயலுக்கு முந்திய அமைதியாகவே இருக்கிறது.

05. பெற்றோல் விலை உயரப்போகிறது, இப்போதே உயர்ந்துவிட்டது பல மணி நேரம் வரிசையில் நின்றுதான் பெற்றோல் வாங்க வேண்டியிருக்கிறது, இனி அதுவும் நீடிக்கப்போகிறது.

06. தொலைபேசிக்கான அட்டைகளை வாங்கி நிரப்பிவிட்டோம், யார் எங்கு போகிறோமோ தெரியாது தொடர்பெடுக்க அது அவசியம்.

07. ஆஸாட் தோற்பார் என்று ஒரு தரப்பும், குறைந்தபட்சம் டமாஸ்கஸ்சையாவது காப்பாற்றுவார் என்று இரு தரப்பாக மக்கள் கருத்துக் கூறுகிறார்கள்.

08. நாங்கள் தனித்துள்ளோம் ஒரு சர்வாதிகாரி எங்களை இரண்டரை வருடங்களாக படாத பாடு படுத்திக்கொண்டிருக்கிறான், எங்களை உலகம் கைவிட்டுவிட்டது.

09. ஆஸாட் றெஜீமின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது.

10. ஆண்டவனே உயிருக்குப் பாதுகாப்பில்லாத இந்த நாட்டில் நாம் ஏன் வாழுகிறோம்..

11. இவங்கள் இருவருக்கும் வேற வேலையில்லை..

12. சண்டையை போடுங்கோ என்று நாங்கள் கூறவில்லை இன்று எங்களுக்குத்தான் நச்சுவாயு பரிசு, இரண்டு தினங்களாக மூச்செடுக்க முடியாது கைகளை உயர்த்த முடியாது படாதபாடு பட்டுவிட்டேன்..

இப்படியான கருத்துக்களை அவர்கள் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
அலைகள்

0 Responses to சிரிய மக்களிடையே சிறீலங்கா தமிழர் போல பதட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com