Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் மேலும் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றசாட்டில், சிபிஐ காவலில் இருக்கிறார் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி. ஹைதராபாத் கஞ்சன் குடா சிபிஐ சிறப்பு நீதிமன்ற காவலில் இருக்கும் ஜகன் மோகனை, காணொளி மூலம் விசாரணை நடத்திய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜகனின் காவலை செப்டெம்பர் 20ம் திகதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஜகன் கடந்த ஒரு வருடமாக கஞ்சன்குடா சிறையில் இருக்கிறார். இதற்கிடையில் இவர் தனி தெலுங்கானா முடிவுக்கு எதிர்ப்பு தெர்வித்து தமது நாடளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கி இருந்தார். இந்நிலையில் அவரது உடல் மோசமடையவே, அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டிக்கு மேலும் காவல் நீட்டிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com