Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்கா தாக்குதலை உடனடியாக நடாத்தாமல் தாமதிப்பதால் தரையில் நின்று மோதும் சிரிய படைகளுக்கு பலமான உளவியல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று டேனிஸ் படைத்துறை அக்கடமி ஆய்வாளர் லாஸ் கிறமர் லாசன் தெரிவித்துள்ளார்.
இப்போது போராளிக்குழுக்களுடன் மோதுவதற்காக அவர்கள் எடுத்துள்ள எத்தனமே தூக்க முடியாத பாரமாக இருக்கிறது, இதற்குள் அமெரிக்காவின் தாக்குதலும் ஆரம்பித்தால் பாரம் பலமடங்கு அதிகமாகும்.
அதற்கு எப்படித் தயாராவது என்ற மன உளைச்சலே இப்போது சிரியப் படைகளின் போர்க்கள உளவியலாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தாக்குதலை நடாத்துவதைவிட தாக்குதல் நடக்கப்போகிறது என்ற அச்சுறுத்தல் பலமான உளவியல் தாக்கமாக இருக்கும் என்பது அவருடைய ஆய்வாக இருக்கிறது.
மேலும் இந்த இடைக்காலத்தை அமெரிக்கா இராஜதந்திர நடவடிக்கைகளை முடுக்கிவிடப் பயன்படுத்தும்.
ஆயுதங்களையும், போர் தளவாடங்களையும் உரிய இடங்களுக்கு முன் நகர்த்தவும் எடுத்துக் கொள்ளும்.
சிரியா என்பது மத்திய கிழக்கில் மிகவும் பெரிய நாடு, ஆஸாட் தனது ஆயுத தளவாடங்களை நாடு முழவதும் பரவலாகவே வைத்திருக்கிறார்.
எகிப்து, லிபியா போன்ற நாடுகளுக்கு இஸ்ரேல் நேரடி எதிரியாக இருக்கவில்லை, ஆனால் சிரியா நேரடியாக இஸ்ரேலின் எதிரி நாடாக இருக்கிறது.
இஸ்ரேலின் நயவஞ்சக தாக்குதல்களுக்கு ஏற்றவாறு சிரியா தன்னை பல காலமாகவே தயார் செய்துள்ளது.
லிபியா வேறு, சிரியா வேறு ஆஸாட் மன உறுதியும், பின்வாங்காத போக்கும் கொண்ட பேர்வழி.. வாழ்வா.. சாவா என்பதில் அவருக்கு கவலை இல்லை..
அத்தகைய ஒருவருக்கு ஏற்ப அமெரிக்கா தயாராக சில காலம் வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது.
மேலும் அமெரிக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தால் பிரிட்டன் பிரதமர் அதைக்காரணம் காட்டி மறுபடியும் ஒரு தடவை பாராளுமன்றத்தைக் கூட்டி போருக்கான ஆதரவைக் கேட்க வழியுள்ளது.
இதற்குள் நேற்று வெளியாகியுள்ள அமெரிக்க வெளிநாட்டு கொள்கை என்ற சஞ்சிகையில் சிரியப் படைகள் நச்சு ஆயுதங்களை பாவிப்பதற்காக தீட்டிய திட்டங்கள் அனைத்தும், தாக்குதலுக்கு முன்னரே அமெரிக்காவின் கையில் கிடைத்துவிட்டதாக எழுதியுள்ளது.
கடந்த வெள்ளி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவும் இதைச் சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும் இன்று வெளியான இன்னொரு செய்தியின்படி ஐ.நா நிபுணர்கள் நச்சுவாயு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்து சொல்ல மூன்று வார அவகாசம் கேட்டுள்ளனர்.
ஆனால் கண்காணிப்புப் பிரிவு தலைவருடன் பேசிய பான் கி மூன் அறிக்கையை விரைவுபடுத்தி வழங்கும்படி கேட்டுள்ளார்.
இவை திங்கள் காலையில் மேலைத்தேய ஊடகங்களின் முக்கிய செய்திகளாக இருக்கின்றன.
அலைகள்

0 Responses to சிரியப் படைகளுக்கு உளவியல் அழுத்தம் : ஆய்வாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com