”வாழ வீடு கொடுக்காத மக்கள்... ஆள நாட்டை கொடுத்துள்ளனர்” - சீமான் பேச்சு!
இயக்குனர்
வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் ’மிர்ச்சி’ செந்தில், விஜயலக்ஷ்மி
நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வெண்ணிலா வீடு. இத்திரைப்படத்தின்
இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீமான், இயக்குனர் செல்வமணி, கவிஞர்
தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இசை
வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சீமான் “என் அண்ணன் R.K.செல்வமணி
பெயரில் இருக்கும் R.K என்பதை நான் தான் ரா.கா. என மாற்றி வைத்தேன். அவர்
விஜயலக்ஷ்மி, மஹாலிங்கம் என்ற பெயர்கள் தமிழ்ப் பெயர் என்று
நினைத்துக்கொண்டிருக்கிறார். விஜயலக்ஷ்மி என்பது தமிழ்ப் பெயர் அல்ல.
வெற்றிச் செல்வி என்பது தான் தமிழ்ப்பெயர்.
எல்லோரும்
பொதுவாக எங்களைக் கேட்கும் கேள்வி தமிழ் தமிழ் என்கிறீர்களே தவிர... நடிகை
வேண்டும் என்றால் பாம்பே, கேரளா சென்று யாரையாவது இழுத்துவருகிறீர்களே!
என்பது தான். ஆனால் அது அப்படி அல்ல, நம்ம பொண்ணுங்க நடிக்க வர்றது இல்ல.
ஆனா விஜயலக்ஷ்மி தான் துணிஞ்சு நடிக்க வந்திருக்கு. அது தான் எனக்கு
பெருமையா இருக்கு.
தமிழ்நாட்ல
இருக்க ஒரே ஒரு தமிழ் கதாநாயகி விஜயலக்ஷ்மி தான். இது எங்கள் முன்னோர்கள்
செய்த பிழை. திரைப்படங்களை சாக்கடை போல, தீண்டத்தகாதது போல சொல்லி
வைத்தது. சாக்கடை என தமிழர்கள் தள்ளி நிற்க அதில் ஊறிய பன்னி, நாய், பேய்
எல்லாம் நாட்டை ஆண்டுவிட்டு போய்விட்டது.
நடிக்க
வரும் நடிகைகளுக்கு வீடு கொடுப்பதில்லை, நடிகர்களுக்கு திருமணம்
செய்துகொள்ள பெண் கொடுப்பதில்லை, திரைப்பட கலைஞர்களுக்கு பெண்ணும்
கொடுப்பதில்லை, வீடும் கொடுப்பதில்லை. வாழ்வதற்கு வீடு கொடுக்காத எம் இன
மக்கள் கடந்த 50 வருடமாய் ஆள்வதற்கு நாட்டை கொடுத்துள்ளனர் என்பதுதான்
வேதனையான வெக்கக்கேடான விஷயம்” என்று பேசினார்.
மேலும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இலக்கியத்தோடு நின்றுவிடாமல் கூடிய விரைவில் பாடலாசிரியராகவும் வரவேண்டும் என்று கூறினார்.




0 Responses to ”வாழ வீடு கொடுக்காத மக்கள்... ஆள நாட்டை கொடுத்துள்ளனர்” - சீமான் பேச்சு!