Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் ஒபாமாவின் திட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவுக்கான செனட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
 இதையடுத்து அடுத்த அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் இத்திட்டம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளன.

60 நாள் கால எல்லைக்குள் அமெரிக்க ஆயுதப் படைகள் நேரடியாக சிரியா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், சிரிய இராணுவப் படைகளின் அனைத்து ஆயுத அச்சுறுத்தல்களையும் முடக்குவது இத்திட்டமாகும். முன்னதாக அமெரிக்காவின் இத்திட்டத்திற்கு,  இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் ஆதரவளித்திருந்த போதும் இறுதி நேரத்தில் இங்கிலாந்து பின்வாங்கியது. பிரான்ஸ் தொடர்ந்து முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் யோசனை குறித்து ரஷ்யா இப்போதே தனது எதிர்ப்பை பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.  ஐ.நாவின் ஒப்புதல் இல்லாமல் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் கோபத்தையே ஏற்படுத்தும்.  சிரியாவில் இராசயன ஆயுதங்களை பாவித்தது யார் என ஐ.நா உறுதிப்படுத்தும் பட்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயார் என புடீன் மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பேர்க்கில் தொடங்கும் ஜி.20 மாநாட்டில் சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து பேசுவதற்கு பதில் சிரிய விவகாரமே அதிகம் எதிரொலிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to சிரியா மீது இராணுவ நடவடிக்கை : ஒபாமாவின் திட்டத்திற்கு செனட் ஆதரவு : ரஷ்யா எதிர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com