இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விடயங்களை கண்காணிப்பு செய்துள்ள ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எடுக்கும்
நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகள்
மீண்டும் உறுதி செய்துள்ளது.
உலகம் பூராவும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும். அதன் பிரகாரம் நவநீதம்பிள்ளை எடுக்கு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று அறிவித்துள்ளது.
நியூயோக்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளரான பர்ஹான் ஹக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானமை தொடர்பில் அதிர்ப்தி வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய நாடுகளின் உறுப்பு அமைப்பின் பிரதிநிதியொருவருக்கு கருத்து தெரிவித்தமைக்கான மக்களோ- அமைப்புக்களோ அச்சுறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல என்று குறிப்பிட்டார்.

0 Responses to இலங்கை விவகாரத்தில் நவபிள்ளை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு: ஐக்கிய நாடுகள்