ரஷ்யாவில் நடைபெற்று வரும் G20
நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள அமெரிக்க
ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளிக்கிழமை அங்கு பல நாட்டுத் தலைவர்களையும் சமூக
உரிமை அமைப்புக்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஏற்கனவே சிரிய பிரச்சினை, ஸ்னோவ்டென் விவகாரம் என ரஷ்யாவுடன் பல முரண்பாடுகள் இருக்கும் நிலையில் ஒபாமா அங்கு ஓரினச்சேர்க்கை ஆர்வலர்களின் (gay rights activists) வக்கீல்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் ஓரினச்சேர்க்கை உரிமை பற்றிய கலந்துரையாடல்களை மட்டுப் படுத்தி வரும் ரஷ்ய சட்டங்களையும் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவ்வருடத் தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அந்நாட்டுப் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமை பற்றிய சட்டத்தில் கைச்சாத்திட்டு இருந்தார். இதன் படி ஓரினச் சேர்க்கை உறவுகள் மற்றும் இது குறித்த விவகாரங்களை பொது மக்கள் முன்னிலையில் சிறுவர்கள் கேட்கும் படியாக உரையாட முடியாது என்பதுடன் இதை மீறுபவர்களுக்கு அபராதம் அறவிடப் படும். மேலும் இச்சட்டத்தை மீறியவர்கள் வெளிநாட்டினராக இருந்தால் அவர்களின் விசா ரத்து செய்யப் படவும் வாய்ப்புள்ளது.
ஓரினச் சேர்க்கை ஆர்வலர்கள் மற்றும் அவர்களின் திருமண உரிமை பற்றிய வக்கீல்களைச் சந்தித்த பின் ஒபாமா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ரஷ்ய சட்டங்களை என்னை விட அதிகமாக யாரும் குற்றஞ்சாட்டி இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னைய தினம் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புட்டினும் தனிப்பட்ட ரீதியில் பல மணிநேரங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to ரஷ்ய ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடும் வக்கீல்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஒபாமா