Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தேசியப் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அது வரை அதற்காக போராடவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இனவாதம் பேசி நாட்டில் சமாதானத்தையும்- இணக்கப்பாட்டையும் ஏற்படுத்த என்றைக்கும் முடியாது. முன்னைய தலைவர்கள் பேசிய இனவாதமே இன்றைக்கு தமிழ்- சிங்கள மக்களுக்கு பெரிய பாதிப்பை வழங்கியுள்ளது. ஆகவே, இனவாதமற்ற அரசியலை அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறினார். இனவாத சிந்தனைகளும்- பேச்சுக்களுமே நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக 30 வருடங்கள் ஆயுத மோதல்களுக்குள் தள்ளியது. மோதல்களினால் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. திறந்த பேச்சுக்களின் மூலமே அது முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே நாட்டில் சமாதானத்தை நிலைக்கச் செய்யும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டும்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com