Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் வாழ்வுக்காய் ஐநா சபை முன்றலில் தனது இன்னுயிரை ஈகம் செய்த வீரத்தமிழ்மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு  யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை தனது வீரவணக்கத்தை இத்துடன் தெரிவிக்கின்றது.

தாய்நிலம் மீதான தணியாத தாகத்தால் ராஜதந்திரமுச்சந்தியில் தீமூட்டி எரிந்த எமது உறவை நெஞ்சில் சுமந்து எதிர்வரும் 16.09.2013 அன்று ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மாபெரும்  இன அழிப்புக்கு நீதி கோரும் பேரணியில் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழ் அனைவரும் அணிதிரள இத்துடன் அழைப்புவிடுக்கின்றோம்.  ஐநா மனிதவுரிமை சபை அமர்வுகள் நடைபெறும் நாட்களில்  கண்ணீர் சிந்துவதற்கான காலமல்ல.தொடரும் கண்ணீர் வாழ்க்கையை நிறுத்துவதற்காக சிந்திக்க வேண்டிய நேரம்
யேர்மன் அனைத்து மாநிலங்களிலும் பிரையாண ஒழுங்குகள் தாய் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுளது.



இத்துடன் யேர்மனியில் பல நகரங்களில்  தனது இன்னுயிரை ஈகம் செய்த வீரத்தமிழ்மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கான வணக்க நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

சுடர் ஏற்றி வணக்கம் செலுத்திய மறுகணமே அவர்களின் லெட்சியம் நிறைவேற போராடுவோம்!
வெல்லும் வரை போராடுவோம்.

அடிமை வாழ்வு அடங்கிடும் வரை போராடுவோம்.
விடுதலைக்கான தடைகள் விலகும் வரை போராடுவோம்.
சுதந்திரத்தை அடையும் வரை போராடுவோம்.

வீரத்தமிழ்மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் குடும்பத்துடனும் உறவுகளுடனும் இத் தருணத்தில் அன்போடு நாம் இணைத்து நிற்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!!

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை




0 Responses to வீரத்தமிழ்மகன் செந்தில்குமரன் சாம்பலின் மீதொரு சத்தியம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com