20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்டாலும், எதிர்வரும் பொதுத் தேர்தல் விகிதாசார முறைப்படியே நடத்தப்பட வேண்டும் என்று சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அவசர தீர்மானத்தை எடுக்காது ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான இரு தேர்தல் திருத்த யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வருவது எனவும் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
வெகுவிரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் இறுதி முடிவை எட்டுவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறு கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை பத்திரமுல்லவிலுள்ள விடுதியொன்றில் முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தினர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, சிறீ ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

0 Responses to பொதுத் தேர்தல் விகிதாசார முறைப்படி நடத்தப்பட வேண்டும்: சிறுகட்சிகள் கோரிக்கை!