Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் மறை மாவட்டத்துக்கான புதிய ஆயராக ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை திருநிலைப்படுத்தும் நிகழ்வு யாழ் மரியன்னை பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பியரே நியூஜென்வன் ரொட் ஆண்டகை, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கையிலுள்ள 13 மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள், துறவிகள், மற்றும் பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஓய்வு பெற்றுச் செல்லும் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமை திருநிலைப்படுத்துனராகவும், கண்டி மறைமாவட்ட ஆயர் வியான்னி பெர்னாண்டோ ஆண்டகையும், திருமலை மறைமாவட்ட முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை ஆகியோர் இணைந்து புதிய ஆயருக்கான திருநிலைப்படுத்தும் சடங்கினை நிறைவேற்றி வைத்தனர்.

0 Responses to யாழ். மறை மாவட்ட ஆயராக பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை திருநிலைப்படுத்தப்பட்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com