மேற்குலகின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் மேலதிக அணுசக்தி மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வடகொரியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையைப் பார்வையிட்ட பின்னர் தமது நாட்டில் அணு வல்லமை அதிகரிக்கப் பட வேண்டும் எனவும் இதன் மூலம் அணுவாயுதத் தாக்குதலில் மிகவும் சக்தி படைத்த நாடாக வடகொரியா உருவாக வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டதாக வெள்ளிக்கிழமை KCNA செய்தி ஊடகம் அறிவித்துள்ளது.
இந்த ஊடகத்தின் அறிவிப்பில் வடகொரியா ஏற்கனவே மேலதிக அணுவாயுதப் பரிசோதனையை ஆரம்பித்து விட்டதா என்பது குறித்துக் கூறப்படவில்லை. ஆனால் வியாழக்கிழமை வடகொரியா பரிசோதித்த இரு ஏவுகணைகளுமே 500 Km தூரம் வரை பயணித்து கடலில் வீழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஜனவரியில் வடகொரியா தனது 4 ஆவது அணுப் பரிசோதனையையும், அதைத் தொடர்ந்து கடந்த மாதம் நீண்ட தூரம் செல்லக் கூடிய ராக்கெட்டுப் பரிசோதனையையும் நடத்தியிருந்தது. இவ்விரு பரிசோதனைகள் காரணமாக கொரியத் தீபகற்பத்தில் பதட்ட நிலை ஏற்பட்டதுடன் மேற்குலக்கு அச்சுறுத்தலும், ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது.
அண்மைக் காலத்தில் தனது முக்கிய எதிரி நாடான தென்கொரியா மீது வடகொரியா மீது சைபர் தாக்குதலையும் தொடுத்திருந்தது. இதனால் தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளது 40% வீத தொலைபேசி சேவைகள் ஹேக்கிங் செய்யப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1950 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த கொரிய யுத்தம் நிறைவுற்ற போதும் சமாதான ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. இதனால் பல வருடங்களாகவே அமெரிக்காவும் தென்கொரியாவும் வடகொரியா மீது மறைவில் யுத்தப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன என்பதும் இவ்வேளையில் அவதானிக்கத் தக்கது.

0 Responses to மேற்குலகுக்கு அடிபணியாது அணுசக்திப் பரிசோதனைகளைத் தொடரவுள்ள வடகொரியா!