புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் கருத்தறியும் நிபுணர் குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும், சட்டத்தரணியுமான லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, "கடந்த 4,5,6ஆம் திகதிகளில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்தறியும் அமர்வு உள்பட நாடு பூராவும் இதுவரை மொத்தமாக 5000க்கும் அதிகமான கருத்துக்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனை முறையாக தயாரிக்க கால அவகாசம் தேவைப்பட்டது.
இதனை, முன்னிட்டு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நாங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தோம். ஏப்ரல் மாதம் இறுதிவரை குழுவின் காலத்தை நீடிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம். பிரதமர் அதற்கு பூரண இணக்கம் வெளியிட்டார். எனவே, எங்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற 5000க்கும் அதிகமான கருத்துக்களையும் உள்ளடக்கி நாங்கள் பிரதமரிடன் அறிக்கையை சமர்ப்பிப்போம்." என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் பதவிக்காலம் ஏப்ரல் வரை நீடிப்பு!