தமிழகத்தில் வாக்காளிக்கும் உரிமைப்பெற்ற ஒரு கோடி இளைஞர்களுக்கு அதிமுக ஸ்மார்ட் செல்போன் வழங்கத் திட்டமிட்டு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக இளைய
வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் செல் போன்களை இலவசமாக வழங்கத் திட்டமிட்டு உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி இளைய தலைமுறையினரின் வீடுகளுக்கே செல்லும் வகையில் இந்த ஸ்மார்ட் செல்போன்களை வழங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், இதற்காக பிரபல செல்போன் நிறுவனத்துக்கு முன் தொகை கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். எனவே, தேர்தல் ஆணையம் இதுக்குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to ஒரு கோடி இளைஞர்களுக்கு அதிமுக ஸ்மார்ட் செல்போன்: அன்புமணி