Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மொசாம்பிக் நாட்டுக் கடற்கரையில் 2 வருடங்களுக்கு முன்னர் மாயமாகப் போன மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் நம்பத்தகுந்த பாகம் ஒன்றாகக் கருதப் படும் சேதமடைந்த சிதைவு ஒன்றைத் தனது இளவயது மகன் கண்டு பிடித்திருப்பதாக தென்னாப்பிரிக்கக் குடி மகன் அதிரடியாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

 காஸ்பெர் லொட்டெர் என்ற குறித்த அந்த நபரின் மகன் டிசம்பர் 30 ஆம் திகதி சாய் சாய் என்ற நகருக்கு அண்மையில் மொசாம்பிக் கடற்கரையில் குறித்த பாகத்தைக் கண்டு பிடித்ததுடன் அப்பாகத்தை தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தனது தந்தையிடம் கொண்டு வந்து சமர்ப்பித்துள்ளான். வளைந்திருக்கும் அப்பாகத்தில் 5 டிஜிட் இலக்கங்கள் பதிவாகியுள்ளன. மொசாம்பிக் கடற்கரைப் பகுதியில் இன்னொரு பாகம் சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து லொட்டெரின் மனைவி கடந்த வாரம் அவுஸ்திரேலியன் ஏவியேஷன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து குறித்த டிஜிட்டல் இலக்கங்கள் மாயமான விமானத்தின் போயிங் 777 ரகத்தையே குறிப்பதாகத் தம்மிடம் அவுஸ்திரேலிய ஏவியேஷன் அதிகாரிகள் சொன்னதாகவும் லொட்டெர் தெரிவித்துள்ளார். தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இப்பாகம் பரிசோதனைக்காக அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப் படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

0 Responses to MH370 விமானத்தின் நம்பத்தகுந்த பாகம் தென்னாப்பிரிக்க சிறுவனால் கண்டுபிடிப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com