Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”
Showing posts with label Pulam Peyar Nigazhvugal. Show all posts
Showing posts with label Pulam Peyar Nigazhvugal. Show all posts

21.7.2018 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியினை யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மிகச்சிறப்பாக நடாத்தியது.

தென்மாநிலத்தில் உள்ள 12 தமிழாலயங்களைச் சேர்ந்த 350 வீர வீராங்கணைகள் இவ் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினார்கள். ஆரம்ப நிகழ்வில் இருந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வீர வீராங்கணைகள் மிக ஆர்வத்துடன் தமிழீழத் தேசியக்கொடியின் கீழ் அணிதிரண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

கொட்டும் மழையில் அணிநடையாக அணிவகுத்துவந்த தமிழாலய மாணவ மாணவிகள்; தமிழீழத் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்திச் சென்ற காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

போட்டியிட்ட தமிழாலயங்களில் முதலாவது இடத்தை முன்சன் தமிழாலயமும், இரன்டாவது இடத்தை ரூட்லிங்கன் தமிழாலயமும், மூண்றாவது இடத்தை சின்டில்பிங்கன் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.

செப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port கரையை அடைந்து கப்பலில் கடலைக் கடந்து ஐ.நா. நோக்கிப் பயணித்து செப்ரம்பர் 17ம் திகதி ஐ.நா. முன்றலில் நிறைவடையும். இவ் உந்துருளிப் பயணத்தில் Harwich வரையும் கலந்து கொள்ள விரும்புபவர்களும் தொடர்ந்து ஐ.நா. வரையும்; கலந்து கொள்ள விரும்புபவர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு இந்தப் பேராட்டத்தில் பங்கு கொள்ளலாம்.


''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு''பொங்குதமிழ்'' தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு

பாரிசின் புநகர் பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் தமிழ்ச் சங்கம் நடா த்திய மெய்வல்லுனர்போட்டி முதல் தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் சிறப்பாக இடம் பெற்றது.

காலை 10.30 மணிக்கு சார்சல் நெல்சன்மண்டேலா மைதான முன்றலில் இருக்கும் லெப்டினன் சங்கரின் நினைவு தூபிக்கு சார்சல் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி ஜெயராஜ் அவர்கள்  மரியாதைச் சுடரினை ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முழவுவாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து பிரான்சு , தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றிவைக்கப் பட்டன. பிரான்சு தேசியக் கொடியை சார்சல் தமிழ்ச் சங்க பரப்புரைப் பொறுப்பாளர் திரு.கணேசு அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியினை சார்சல் சங்கப் பொறுப்பாளர் திரு.டக்ளஸ் அவர்களும் ஏற்றி வைத்தனர். சார்சல் தமிழ்ச் சங்க கொடியும், இல்லக் கொடிகளும் ஏற்றிவைக்கப்பட்டன. 16.11.2007 அன்று மன்னார் நீலச்சேனையில் இடம் பெற்ற நேரடி மோதலில் வீரச்சவைத் தழுவிக்கொண்ட லெப்டினன் தமிழ் வீரன்  / சிலம்பரசனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கம் சொலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து இல்ல மொய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமாகின.  ஒலிம்பிக் தீபம் ஏற்றும் வைபவத்தை தமிழர்விளையாட்டுத்துறை முகாமையாளர் திரு இராஜலிங்கம் ஆரம்பித்து வைத்தார். இல்லத் தலைவர்கள், நடுவர்கள் சத்திய பிரமாணம் செய்தனர்.

பிரிகேடியர் சொர்ணம் இல்லம், பிரிகேடியரி பால்ராஜ் இல்லம், பிரிகேடியர் விதுசா இல்லம் என மூன்று பிரிவுகாளாக பிரிக்கப் பட்டு இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம் பெற்றன.

மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பைத் தொர்ந்து மெய்வல்லுநர் போட்டிகளும்,  விநோத உடைப் போட்டியும் இடம் பெற்றன.

இறுதியாக தேசியக் கொடிகளும், இல்லக் கொடிகளும் இறக்கப்பட்டு , நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிபரப்பப்பட்டு தமிழழரின் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இரவு 21.00 மணிக்கு.நிகழ்வுக் நிறைவு பெற்றன.

பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்து பட்டம் பெற்ற மாணவ மாணவியர் மதிப்பளிப்பு நிகழ்வு நந்தியார் பகுதியில் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர், திரு.பொன்மலை அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கேணல் பருதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்;. மலர்வணக்கத்தை கேணல் பருதி அவர்களின் சகோதரன் செய்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆரபி, அனோஜினி, கரிகரணி, திசானிகா, சூரியா,சோனா, அமலினி ஆகியோர் கேணல் பருதி, மாவீரர் நினைவு சுமந்த பாடல்களை வழங்கிச் சிறப்பித்திருந்தனர்.

குசன்வீல் தமிழ்ச்சோலை, சேர்ஜி தமிழ்ச்சோலை, கவின்கலையகம் ஆகிய மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனங்கள், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த செல்வி ஜக்சன் ஆன்ஜெனிபர் அவர்களின் கவிதை, பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த திருமதி யசோதா அவர்களின் நினைவுரை, பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் உருவாக்கத்தில் ‘ஊசி” என்னும் சிறப்பு நாடகம் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தன.

இந்நிகழ்வில் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் வழங்கியிருந்தார். அவர் தனது உரையில், கேணல் பருதி அவர்களை நினைவுகூர்ந்ததுடன் குறித்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரான்சு மண்ணில் உயர்கல்வியை முடித்து பல்வேறு துறைகளிலும் பட்டம்பெற்ற 11 தமிழ் மாணவ மாணவியர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை கேணல் பருதி அவர்களின் தாயார் வழங்கியிருந்தார்.

ஜெயபாலன் ஜெனனி, காணிக்கைநாதன் ஜெனின், மகேந்திரராஜா சபீதா, சிறிரஞ்சன் ஆரணி, பாலச்சந்திரன் தனுசன், தயாபாலன் ஜீவிதன், விஸ்ணுசிங்கம் அன்னாபெல், விஸ்ணுசிங்கம் இசபெல், உதயகுமார் றாசன்ஜா, அரியரட்ணம் துவாரகா, கமலேந்திரன் அஸ்வினி ஆகியோரே சான்றிதழ், நினைவுப்பதக்கம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)<

மாபெரும் மே தின ஊர்வலம் விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.

01.05.2017 இன்று09:30 மணி Zürich Helvetiaplatz இல் ஆரம்பித்து Bürkliplatz இல் முடிவடைந்டது.இதில்சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுத்தார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளுடனும், சுவிஸ் தமிழ் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரினைத் தொடர்ந்து: தன்னினத்தின் துயர் நீக்க தீயில் கருவான வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான அன்றைய தினம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்து ஈகைச்சுடரேற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்திய இவ் பொங்கல் விழாவில் வரவேற்புரையைத் தொடர்ந்து எழுச்சி நடனங்கள், மேற்கத்தேய மற்றும் திரையிசை நடனங்கள், வீணாகானம், கரோக்கே வடிவிலான எழுச்சி, திரையிசைக் கானங்களுடன் எமது வீர வரலாற்றைக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இசைக்கச்சேரியானது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

இளம் கராத்தேக் கலைஞர்களின் ஆற்றுகை வெளிப்பாட்டுடன், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுன், காலத்திற்கேற்ப கருப்பொருளைக் கொண்;ட சிறப்புரை, கவிதை, பேச்சுக்களுடன் வேறுபல நிகழ்வுகளும் அரங்கை சிறப்பித்திருந்ததோடு, நிகழ்வுகளை வழங்கிய கலைஞர்களை எமது உறவுகள் அவர்களின் அரங்கம் நிறைந்த கைதட்டல்கள் மூலம் ஊக்குவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வின் இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் மகிழ்வுணர்வுடன் இனிதே நிறைவுபெற்றன.

தமிழர் திருநாள் 2017 நிகழ்வை நடாத்த பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இன உணர்;வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சர்வதேசத்தின் சமாதான சமிக்கைகளுடன் தமிழீழம் நோக்கி எம்.பி. அகாத் கப்பலில் சென்று கொண்டிருக்கும்போது சர்வதேசக் கடலில் வைத்து இந்திய தேசத்தின் கடற்படையினரால் அந்த அரசின் நம்பிக்கைத் துரோகத்தனத்தால் 1993.01.16 அன்று, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உயரிய குறிக்கோள்களில் ஒன்றான எதிரியிடமும், எதிரியானவனிடமும் உயிருடன் பிடிபட்டு அடிபணியக்கூடாது என்பதற்கமையவும், இந்திய தேசத்தின் ஆட்சிஅதிகார வர்க்கங்கள், தமிழ்மக்கள் சார்பில் உள்ள இரட்டை நிலைப்பாட்டினையும் சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தவும் பல்வேறு போராட்டத்திற்குப் பின்பு அவை பயனளிக்காத நிலையில் தமது கப்பலினை வெடிவைத்து தகர்த்து வங்கக்கடலிலே தனது ஒன்பது சகதோழர்களுடன் வீரமரணத்தை தழுவிக்கொண்ட வீரமறவர்களின் 24 வருடத்தின் நினைவுகளையும், 2009ல் தமிழீழ மக்களாகிய எமது சகோதரர்களை சிங்கள அரசின் வெறியர்களின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றக்கோரி இந்திய மத்திய மாநில அரசிடம் நீதி கேட்டு தன்னைத்தானே தியாகத்தீயினில் தீக்கிரையாக்கி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட வீரத்தமிழ் மகன் முத்துகுமாரின் 8 ஆவது ஆண்டினையும் நினைவுகூர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் பணிமனையினாலும், திறான்சி தமிழ்ச்சங்கத்தாலும் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி நகரத்தில் மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுச்சுடரினை திறான்சி தமிழ்ச்சங்கத்தலைவர் திரு.பாபு அவர்கள் ஏற்றி வைக்க தளபதி கிட்டு அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கைகளுக்கும், ஈகைச்சாவைத்தழுவிக் கொண்ட தோழர் முத்துக்குமார் அவர்களுக்கும், தமிழீழ தேசவிடுதலைக்காக இக்காலப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 1993 ஆனையிறவு தவளைப்பாச்சல் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை இளங்கீரனின் சகோதரியும், 03.12.2007ல் கறிப்பட்டமுறிப்பு சமரில் வீரகாவியமான வீரவேங்கை யாழ்நம்பியின் சகோதரியும், திருகோணமலை கடற்பரப்பில் வீரமரணமடைந்த வீரவேங்கை ஆதவனின் சகோதரரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரும், கடற்கரும்புலி மேஜர்.ஈழவீரனின் சகோதரரும் ஏற்றி வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்த எழுச்சிபாடல்களை கலைபண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களுடன் திறான்சி தமிழ்ச்சங்க கலைபண்பாட்டுக்கழகக் கலைஞர்கள் வழங்கியிருந்தனர். தளபதி கிட்டு அவர்களின் நினைவாக திறான்சி தமிழ்ச்சங்க மாணவிகள் எழுச்சி நடனங்களை வழங்கியிருந்தனர். மாவீரர் நினைவு சுமந்த உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கிய உறுப்பினர் ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் மாலை 5.30 மணிக்கு வணக்க நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

23.12.2016 வெள்ளிக்கிழமை அன்று யேர்மனி, டோர்ட்மூன்ட் (Dortmund) நகரில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மக்களால் மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டு, விடுதலை நோக்கிய அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அரங்க நிகழ்வுகளில் முதலாவதாக தேசத்தின்குரல் நினைவு சுமந்த காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. தொடர்ந்து தேசத்தின்குரல் நினைவு சுமந்த கவிதைகள், எழுச்சிப் பாடல்கள் மற்றும் மேஜர் பாரதி கலைக்கூடம் மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக் கழக ஆசிரியர்களின் நெறியாள்கையில் எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உன்னத அர்ப்பணிப்பை செய்த மாவீர்களை நெஞ்சில் நிறுத்தி எத்தடை வரினும் எமது தாயக விடுதலை போராட்டத்தை தளராத துணிவோடு தமிழீழம் மலரும் வரை தாங்கிச் செல்வோம் என உறுதி எடுத்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை அனைவரும் ஓங்கி ஒலித்து உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவடைந்தது.

தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலர்வணக்கம், சுடரேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.

தமிழ்த் தேசிய விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப மதிப்பளிப்பானது உறவுகளின் உணர்வுப் பகிர்வின் உறவாடலக சிறப்பாக மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

முதற்களப்பலியான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பட்ட புனிதமண் எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கடந்த கால உரைகளிலிருந்து காலத்தின் தேவையைச் சுட்டிநிற்கும் சிறுதொகுப்பு அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016க்கான கொள்கைவகுப்பு அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. மணியோசை, சங்கொலி, பறையொலியுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம் 18:05 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டதுடன், இளையோர்களின் இசையில் மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் இடம்பெற்றன.

சுவிஸ் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின்; அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் நாளில் எடுத்தனர்.

நிகழ்வில் தாயகம் சார்ந்த சிறப்பு வெளியீடுகள் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் கிளையினால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் அறிக்கை வாசிக்கப்பட்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளினால் சிறப்பரைகளும் வழங்கப்பட்டது. மாவீரர் காணிக்கை நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் உணர்வெழுச்சியாக இருந்ததுடன் சமகால நிகழ்வுகளைக் கருத்தியலாகக் கொண்ட “தொலைந்த மனிதம்“; நாடகமானது மக்களின் உணர்வுகளுக்கு மேலும் உரமேற்றியது.

‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக இனிதே நிறைவுபெற்றன.


படங்கள் இங்கே: https://goo.gl/fmJIX



தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன.

இந்த வகையில் லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை(25) தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில்முன்னாள் போராளி மாணவர்களான கோபி, பிரம்மி ஜெகன் ,மற்றும் சத்தியசீலன் தமிழ்வாணி போன்றோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மாணவர்கள் எப்படி ஆரம்பகாலத்தில் ஈழப் போரினில் ஈடுபட்டார்கள் முள்ளிவாய்க்காலில் தனது தந்தையரின் அனுபவங்கள் அவர்கள் அனுபவித்த துயரங்கள் இராணுவத்தின் இனப்படுகொலையின் உச்சகட்ட போரினைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதேவேளை கோபி அவர்கள் சர்வதேச அரசியல் மற்றும் தமிழீழ புவிசார் அரசியல் நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார்.

அத்தோடு இந் நிகழ்வில் தமிழர்களுக்கு எதிரான பிரித்தானியாவின் போர் நூல் எழுத்தாளர் Phil Miller உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

அகவணக்கம் செலுத்தும் முறை

தொடங்கும் போது.

தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக. எனக்கூறி அகவணக்கம் தொடங்கவேண்டும்.

நிறைவு செய்தல்.

நிறைவு செய்வோமாக.. எனக்கூறி முடித்தல் வேண்டும்.

நினைவெழுச்சி நிகழ்வுகளின் ஒழுங்குமுறை

1. பொதுச்சுடர் ஏற்றல் (இதற்கு பெரியவிளக்கை பாவித்தல் வேண்டும்)
2. தேசியக்கொடியேற்றல்
3. சுடரேற்றல் (சிறியவிளக்கு அல்லது மெழுகுவர்த்தி)
4. மாலையிடுதல், மலர்வணக்கம்
5. அகவணக்கம்
6. நிகழ்வுகள்
7. ‘நம்புங்கள் தமிழீழம்’ பாடல்
8. கொடி இறக்கம்

நிகழ்வு நிறைவு

நன்றி.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

மீண்டும் குழப்பவாதிகள்.. உண்மையை உணருங்கள் மக்களே!

தேசிய மாவீரர் நாள் 2016 பிரான்சு வழமைபோல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் ஒழுங்கு செய்யப்பட்டு அதற்கான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த துண்டுப்பிரசுரங்களில் எங்களால் கொடுக்கப்பட்ட முகவரியை நீக்கிவிட்டு புதிய முகவரி இட்டு போலிப் பிரசுரங்கள் குழப்பவாதிகளால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மக்களாகிய நீங்கள் விழிப்பாய் செயற்படல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் நடாத்தப்படும் தேசியமாவீரர் நாள் எம்மால் அறிவிக்கப்பட்ட,

30 Route de Grosley 95200 Sarcelles, என்னும் முகவரியில்தான் நடைபெறும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம். 2012, 2013 ம் ஆண்டுகளில் இரண்டாவது மாவீரர் நாள் நடாத்தியதுபோல் இவ்வாண்டும் இரண்டாவது மாவீரர்நாள் நடாத்தி மக்களுக்கிடையில் குழப்பத்தை விளைவிக்க எத்தனிக்கிறார்கள். 2012, 2013 இல் மண்டபம் எடுத்து நடாத்துவது பிழையயன்று கூறி லாக்கூர்நோவ் பூங்காவிலும், வன்சன் காட்டிற்குள்ளும் நடாத்தியவர்கள் இன்று மண்டபம் எடுத்து இரண்டாவது மாவீரர் நாள் நடாத்துவதாகத் தெரிகின்றது.

மக்களுக்கும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் உள்ள உறவைக் குழப்புவதற்கு எதிரி பல வழிகளில் முயற்சித்துக்கொண்டிருகின்றான் என்பது வெளிப்படை. இதில் மக்களே விழிப்பாய் இருங்கள்.

நன்றி

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு


பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 2 ம் லெப் மாலதியின் 29 ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு Harrow எனும் இடத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

முதன்மை நிகழ்வாக திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட்து அதனை தொடர்ந்து  தமிழீழ தேசிய கொடியேற்றல், மக்கள் சுடர் வணக்கம், மலர்வணக்கம்,செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மாலதி அவர்களின் நினைவுப் பாடலுக்கான  நடனமும், 2 ம் லெப் மாலதி அவர்களுடன் பயிற்சியிலும் களத்திலும்  நின்ற முன்னாள் போராளி அவர்களினால் நினைவுரையாற்றப்பட்ட்து. தொடர்ந்து கவிதை,நினைவுரைகள் இடம்பெற்று தமிழீழ தேசியக்கொடி இறக்குதலுடன் தமிழர்களின் தாரக மந்திரமான  தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

ஐநா மன்றம் நோக்கி ஈருருளிப்பயணம்..

பதிந்தவர்: தம்பியன் 25 September 2016

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 10 வது நாளாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜெனிவா நகரை அண்மித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான பயணம் பல்வேறு நாடுகளை ஊடறுத்து பல்லின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்து , அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டது.

இப் பயணம் பின்வரும் கோரிக்கைகளுடன் எதிர்வரும் திங்கள் கிழமை 26.09.2016 அன்று ஜெனிவா நகரில் நடைபெறும் மாபெரும் பேரணியில் இணைத்துக்கொண்டு ஐநா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்திடம் மனுவை கையளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைகள்:

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி நிரந்தர தீர்வு தமிழீழம்

1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நாளை (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தொடருந்து புறப்படுகின்றது.

Gare de Lyon இல் இருந்து காலை 9.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.15 மணிக்கு ஜெனிவாவைச் சென்றடையும் தொடருந்துகள், மீண்டும் இரவு 19.42 மணிக்கு ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு இரவு 10.49 மணிக்கு Gare de Lyon வந்தடையவுள்ளது.

இதற்கான பயணச் சீட்டுக்கள் தற்போது வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடமோ அதன் பிரதேச செயற்பாட்டாளர்களுடனோ விரைந்து தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

நாளை சில சுநுசு தொடருந்துகள் தமது சேவையை மட்டுப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கும் காரணத்தால் உங்கள் பயணத் தாமதத்தைத் தவிர்த்துக்கொள்வதற்கு முன்னதாகவே Gare de Lyon வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

– தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.

ஜேர்மனியின் தலைநகரம் பேர்லினில் நேற்றைய தினம் 5ஆவது தடவையாக தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளும் முதலாம் இடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டு, சுற்றுக்கிண்ணத்தை தட்டிச்சென்ற Lichterfelde தமிழர் விளையாட்டுக்கழகம் இம்முறை மூன்றாவது முறையாகவும் முதலாம் இடத்தை வகுத்து தமிழீழ வெற்றிக்கிணத்துக்கான சுற்றுக்கிண்ணத்தை தமதாக்கி கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும், இம் முறை ஆரம்பத்தில் இருந்து மிகவும் சிறப்பாக விணையாடிய தமிழர் விளையாட்டுக் கழகம் 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் முதலாம் இடத்தை தட்டிச் சென்று தமிழீழ வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டனர்.

பேர்லின் நகரில் பிரசித்தி பெற்ற Tempelhofer Feld மையத்தில் அமைந்திருக்கும் Berlin Braves Baseball Platz மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடைபாதையில் சென்ற நூற்றுக்கணக்கான பல்லின மக்களின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் சிறப்பாக துடுப்பாடிய வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

2009 மே 18ல் தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தின் ஆறாத வடுக்களாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஏக்கத்துடனும் கவலையுடனும் பதறிய நிலையில் தம்முயிர்களை துறந்த தமிழனின் வரலாற்றில் மறக்க முடியாத துயரநாள் மே 18.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7 ம் ஆண்டு நினைவு நாள் புலம்பெயர் தேசமெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அவற்றின் விபரங்கள் இதோ....

பிரித்தானியா
ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசின் கட்டமைப்பு சார் தமிழினப் படுகொலையின் 7ம் ஆண்டு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ள இவ் வணக்க நிகழ்வு மத்திய லண்டனின் Waterloo Place பகுதியில் ஆரம்பமாகி பேரணியாக Richmond terrace என்ற இடத்தை நோக்கி நகரவுள்ளது.

சுவிட்சர்லாந்து
ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசின் கட்டமைப்பு சார் தமிழினப் படுகொலையை சுவிஸ் சமூகத்திற்கு வெளிக்கொண்டு வரவும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வு சுவிஸில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு நாளை புதன்கிழமை சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்னால் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வை சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, அக்கினிப் பறவைகள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கென வாகன ஒழுங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்து
நெதர்லாந்து தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெதர்லாந்து நேரப்படி நாளை புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு Damplein, Amsterdam என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களை நினைவு கூர்ந்து தாயகத்தில் கடந்த 12ம் திகதி தொடக்கம் வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்
ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலையை உலகிற்கு எடுத்துக்கூறிய முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்கில் நினைவு கூரப்படவுள்ளது. நாளை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு டென்மார்க் நாடாளுமன்றத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வை டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறவும் அநியாயமாக கொல்லப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தியும் டென்மார்க் வாழ் தமிழர்களை இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம்
ஈழத்தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பெல்ஜியத்தில் இடம்பெறவுள்ளது. வணக்க நிகழ்வு நாளை புதன்கிழமை மாலை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நினைவுக் கல்லறை முன்பாக ஆரம்பமாகி புதிய நீதிமன்ற முன்றலில் நிறைவடையவுள்ளது. தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் அயராது செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், பெல்ஜியம் வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நாள் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் இடம்பெறவுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் (Orangerie parc அருகில்) ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீலங்கா அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி, நீதியைப் பெற்றுத் தரவும், அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும், தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைகளை ஏற்றுக்கொள்ளக் கோரியும் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில், வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா
சிங்களப் படைகளால் காட்டுமிராண்டித்தனமாக கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் இடம்பெறவுள்ளது.' தமிழர் இனவழிப்பு நினைவு நாள்' நிகழ்வு, எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை மாலை 6.30 அளவில் Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

கனடா
கனடா ஸ்காபரோ அல்மேர்ட் காம்பல் சதுக்கத்தில் 7ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் அனுஸ்டிக்கப்படவுள்ளது. மே 18 புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந் நிகழ்வினை கனடிய தமிழர் தேசிய அவை ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு உச்சத்தின் போது இறுதிவரை அந்த மக்களோடு இருந்த, தமிழின அழிப்பின் நேரடி சாட்சியான டொக்டர் வரதராஜன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 நிகழ்வுகள் உலகின் பல பாகங்களிலும் அந்நாடுகளுக்குரிய நேர ஒழுங்கமைப்பின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படவுள்ளன.

சுவிஸ் சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகளாவிய ரீதியில் அதனை மக்கள் வெகு விமர்சையாக முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில், சுவிஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடனும், பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும் தமது ஊர்வலத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

கொட்டும் மழையிலும் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யேர்மனி பொன் நகரத்தில் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி , சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களின் நினைவுகளை தாங்கிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com